சூர்யாவின் ஆபாச வீடியோ என்னிடம் இருக்கிறது - பகீர் கிளப்பும் அலிஷா

திருச்சி சூர்யா சிவா ஆபாசமாக பேசிய வீடியோ தன்னிடம் இருப்பதால அலிஷா அப்துல்லா தெரிவித்திருக்கிறார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Dec 28, 2022, 07:24 PM IST
  • சூர்யாவின் ஆபாச வீடியோ
  • அலிஷா அப்துல்லா பரபரப்பு குற்றச்சாட்டு
  • விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி
சூர்யாவின் ஆபாச வீடியோ என்னிடம் இருக்கிறது - பகீர் கிளப்பும் அலிஷா title=

திமுக எம்.பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா பாஜகவில் இணைந்தார். ஆனால் அங்கு டெய்சியுடன் ஏற்பட்ட பிரச்னை மற்றும் வேறு சில காரணங்களால் பாஜகவிலிருந்து விலகினார். இதனையடுத்து அக்கட்சி குறித்தும், அக்கட்சியின் தமிழ்நாடு நிர்வாகிகள் குறித்தும் கடுமையான விமர்சனங்களையும், குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்து வருகிறார் சூர்யா. அந்தவகையில் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், பாஜக பெண் நிர்வாகி அலிஷா குறித்தும், அமர் பிரசாத் குறித்தும் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

இந்நிலையில் அலிஷா தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “னக்கு ஒரு நாளைக்கு 10 தடவையாவது சூர்யா சிவா போன் செய்து கொண்டே இருப்பார். இதனால் நான் அவரை பிளாக் செய்துவிட்டேன். அதனால் என் மீது தற்போது அவதூறு கருத்துகளை பேசி வருகிறார்.

எனது உடை குறித்தும் உடல் அங்கங்கள் குறித்தும் திருச்சி சூர்யா சிவா பேசியதை பார்க்கும் போது அவருடைய வளர்ப்பில் தவறு இருக்கிறது. பொது வெளியில் ஒரு பெண்ணை பற்றி இப்படி பேசியுள்ளார். திருச்சி சூர்யா சிவா பேசியது கேவலமாக இருக்கிறது. அவர் மீது பெரிய அளவிலான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

Surya Siva

நான் இந்த சம்பவம் குறித்து மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் கூறினேன். அப்போது அவர் எனக்கு தைரியம் கொடுத்தார். பாஜக எப்போதும் உங்களுக்கு ஆதரவாக இருக்கும் என்றார். மேலும் சூர்யா சிவா குறித்து ஒரு பிரஸ் மீட் கொடுங்கள் என்றார். அதன்படி நானும் கொடுத்தேன். 

திருச்சி சூர்யா சிவா மீது பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன். அதுபோல் அவர் பேட்டி கொடுத்த யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது. இந்த நடவடிக்கைக்கு பிறகு பெண்கள் மீது தவறான குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் அளவுக்கு யார் பேட்டி கொடுத்தாலும் அதை எடுக்கவே கூடாத வகையில் இந்த நடவடிக்கை இருக்கும்

என் அலுவலகத்திற்கு திருச்சி சூர்யா சிவா வந்து ஆபாசமாக பேசியது தொடர்பான வீடியோவை நான் எல்லோரிடத்திலும் கொடுக்கவில்லை. இந்த வீடியோ மிகவும் முக்கியமான வீடியோ ஆகும். இதில் நிறைய பெண்கள் குறித்தும் சீனியர் தலைவர்கள் குறித்தும் திருச்சி சூர்யா சிவா தவறாக பேசியுள்ளார். அவர் பேசியதை நான் நிறைய எடுக்கவில்லை” என்றார்.

மேலும் படிக்க | புத்தாண்டு கொண்டாட்டம் - காவல் துறையின் கட்டுப்பாடுகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEata

Trending News