அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மொத்தம் நிறைவேற்றப்பட்ட 23 தீர்மானங்களில் இரண்டு தீர்மானங்களில் மத்திய அரசுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துளது. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு எந்த நவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளது அதிமுக. சர்வதேச விவகாரங்களில் தீர்வு காண முந்திக்கொள்ளும் மத்திய அரசு, கச்சத்தீவு மற்றும் தமிழக மீனவர்களை பாதுகாப்பதில் மவுனம் காப்பதாக குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட கச்சத்தீவை மீட்க மத்திய அரசு உரிய நவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல், தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் திமுக அரசு, மீனவர்களின் நலனில் அக்கறை கொள்ளவில்லை என குற்றம்சாட்டியிருக்கும் அதிமுக, இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வாழ்வாதாரத்தை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறது. மேலும் இலங்கையில் சிறையில் இருக்கும் தமிழ்நாட்டு மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை மீட்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான பொதுக்குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னொரு தீர்மானத்தில் நாடாளுமன்ற பாதுகாப்பு குறைப்பாட்டு்ககு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினத்திலேயே சில விஷமிகள் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து புகை குண்டுகளை வீசியிருப்பது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். இதனை இன்னொரு பாடமாக எடுத்துக் கொண்டு நாடாளுமன்ற பாதுகாப்பு விவகாரத்தில் எந்தவொரு சமரசமும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அதிமுக வலியுறுத்தியுள்ளது. ஜனநாயகத்தின் பாதுகாப்பை உறுதி செய்வது மத்திய மாநில அரசுகளின் கடமை என தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | டிஆர்பி ராஜாவுக்கு சவால் விடுகிறேன்.. ரெடியா என கேட்டு சொல்லுங்கள் - அண்ணாமலை
அதேநேரத்தில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக எந்த தீர்மானமும் இந்த பொதுக்குழுவில் இடம்பெறவில்லை. கூட்டணி குறித்தும், தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் எந்த வாக்கியமும் இடம்பெறவில்லை. மாறாக, தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும் என்பது மட்டும் அதிமுக பொதுக்குழு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இங்கு தான் டிவிஸ்ட் இருப்பதாக பார்க்கப்படுகிறது. பாஜகவுடன் கூட்டணி என்பதை எந்த இடத்திலும் கூறவில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ