சசிகலாவுக்கு கொரோனா தொற்று குறைந்துள்ளது; அவரது உடல்நிலை சீராக உள்ளதாக விக்டோரியா மருத்துவமனை தெரிவித்துள்ளது!!
விக்டோரியா மருத்துவமனையில் (Victoria Hospital) சிக்கிச்கை பெற்று வரும் சசிகலாவின் (AIADMK leader Sasikala) உடல்நிலை சீராக உள்ளதாகவும், கொரோனா வைரஸ் (Coronavirus) பாதிப்பின் தன்மை குறைந்துள்ளதாகவும் விக்டோரியா மருத்துவமனை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
நேற்று முன் தினம் மாலை சுவாசப் பிரச்சனை காரணமாக பெளரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலா உயர் சிகிச்சைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு நேற்று பிற்பகல் மாற்றப்பட்டார். இதையடுத்து அவருக்கு உடனடியாக CT ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு நுரையீரல் தொற்று (Lung infection) இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த தொற்று மேலும் பரவாமல் இருக்கும் வகையில் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) தொடர்ந்து சிகிச்சை தரப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
ALSO READ | சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!
இந்நிலையில், RT-PCR சோதனை முடிவின் அடிப்படையில் சசிகலாவுக்கு கொரோனா இருப்பது நேற்றிரவு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து கொரோனா (Covid-19) வார்டுக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சைகள் தொடர்ந்து வருகின்றன.
இந்நிலையில், இன்று இரவு இரவும் 10 மணியளவில் சசிகலா உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “சசிகலா அவர்களுக்கு ஏற்பட்ட வைரஸ் பாதிப்பின் தன்மை குறைந்துள்ளது. சசிகலா நல்ல உடல்நலத்துடன் மருத்துவர்களின் ஆலோசனைப்படி சீராக உள்ளார். சசிகலா அவர்களின் ரத்தத்தில் 97% ஆக்சிஜன் அளவு உள்ளது. கொரோனா வைரஸ் பரவலுக்கு கொடுக்கப்படும் சிகிச்சை சசிகலாவுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து சிகிச்சைகளுக்கும் சசிகலா தகுந்த ஒத்துழைப்பு அளிக்கிறார். கொரோனா வார்டில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” எனக் கூறினார்.
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR