கடந்த ஜூன் 23 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என ஓ பன்னீர் செல்வம் தரப்பு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் நீதிபதிகள் கூட்டத்தில் 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்ற கூடாது என்று உத்தரவிட்டனர்.
மேலும் அந்த பொதுக்கூட்டத்தில் இருந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பாதியில் வெளியேறினார். மேலும் அதிமுக ஓபிஎஸ் தரப்பு - இபிஎஸ் தரப்பு என பிரிந்து இருதரப்பும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த சூழலில் சென்னை வானகரத்தில் உள்ள அதே மண்டபத்தில் ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதேசமயம் பொதுக்குழுவுக்கு தடைக் கேட்டு ஓ.பன்னீர்செல்வம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்து தீரபு வழங்கிய நீதிமன்றம், ஜனநாயகத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பமே மேலோங்கி இருக்கும் எனவும், பொதுக்குழுவில் உறுப்பினர்களாக உள்ள 2,665 பேரில் 2,100க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பொதுக்குழுவை கூட்ட விருப்பம் தெரிவித்துள்ளதால் பொதுக்குழுவை கூட்டலாம் என அனுமதியளித்து உத்தரவிட்டார்.
மேலும் படிக்க | அதிமுக அலுவலகத்தில் தொடர்ந்து பதற்றம்! கற்களை வீசி தாக்குதல்!
இதற்கிடையில் இந்த தீர்ப்புக்கு பிறகு அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டதில் பங்கேற்க அடையாள அட்டை வைத்திருக்கும் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மேலும் பொதுக்குழு கூட்டத்துக்கு உறுப்பினர்கள் வருகைதர தொடங்கியதால் மதுரவாயல் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது, அத்துடன் அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு சென்னை சென்ற வேனும் கண்டைனர்லாரியும் மோதிய விபத்தில் 15 பேர் காயமடைந்தனர்.
இதனிடையே இந்த பொதுக்குழுவில் அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக மட்டுமே எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்படுவார். அதன்படி தொண்டர்கள் மூலம் வாக்குகள் செலுத்தப்பட்டு அவர் நிரந்தர பொதுச்செயலாளர் ஆவார். இதன் மூலம் அவரின் பதவிக்கு சட்ட ரீதியாக பலமான ஆதரவு கிடைக்கும். அத்துடன் இந்த பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அவை.,
1) அதிமுகவின் அமைப்பு தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவிப்பது.
2) தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்தல்.
3) மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி தீர்மானம்.
4) இலங்கை தமிழர் நலன் காக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தல்.
5) நெசவாளர் துயர் துடைக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தல்.
6) அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை ரத்து செய்து, கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் பொது செயலாளர் பொறுப்பு குறித்து விவாதித்து முடிவு செய்தல்.
7) எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியின் சாதனைகளும் , எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் செயல்பட்ட அரசின் வரலாற்று வெற்றிகளுக்கும் பாராட்டு தெரிவிப்பது.
8) அதிமுகவின் இடைக்கால பொது செயலாளரை, நடைபெறவுள்ள பொதுக்குழுவிலேயே தேர்வு செய்ய வேண்டுகோள் விடுத்தல்.
9) அதிமுக பொது செயலாளர் தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியிட கோரும் தீர்மானம் நிறைவேற்றுதல்.
10) அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து விவாதித்து கட்சி வளர்ச்சி குறித்து முடிவு எடுத்தல்.
11) அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பை உருவாக்குவது குறித்து விவாதித்து முடிவு செய்தல்.
12) அதிமுக அரசின் மக்கள் நலதிட்டங்களை ரத்து செய்யும் திமுக அரசிற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றுதல்.
13) விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மக்கள் விரோத திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது.
14) சட்டம் ஒழுங்கை பேணிக் காக்க தவறிய திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது.
15) அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசை வலியுறுத்தல்.
16) தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அரசியல் காழ்புணர்ச்சியோடு கழகத்தினர் மீது பொய் வழக்கு போடும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது.
அதேபோல் அதிமுக பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் உருவாக்கும் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. அதேபோல் பொதுக்குழுவில் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அதிமுகவில் முதன்முறையாக துணை பொதுச்செயளாளர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது, துணை ஒருங்கிணைப்பாளர் பதவி துணை பொதுச்செயலாளர் என மாற்றப்பட்டுள்ளது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் நான்கு மாதங்களுள் பொதுச்செயலருக்கான தேர்தலை நடத்தி முடிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கே.பி. முனுசாமியை அதிமுகவின் துணை பொதுச்செயலாளராக்க பொதுக்குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இரட்டை தலைமையால் நிர்வாக ரீதியாக, அரசியல் ரீதியாக முடிவு எடுப்பதில் சங்கடம், தாமதம் ஏற்பட்டது. அதிமுக எழுச்சி பெற ஒற்றைத் தலைமை தேவை என பொதுக்குழுவில் தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | தொடரும் வருமான வரி துறை சோதனை! மீண்டும் சிக்கிய எஸ்பி வேலுமணி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR