இந்தியாவை இரண்டாக பிரிக்கும் நிலை உருவாகும் என சீறும் சீமான்: விளக்கம் என்ன

Aggressive Speech of Seeman: மத்திய மாநில அரசுகள், அதிமுக என அனைவரையும் விமர்சிக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 25, 2022, 08:56 AM IST
  • Aggressive Speech of Seeman: மத்திய மாநில அரசுகள், அதிமுக என அனைவரையும் விமர்சிக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
இந்தியாவை இரண்டாக பிரிக்கும் நிலை உருவாகும் என சீறும் சீமான்: விளக்கம் என்ன title=

திருநெல்வேலி: தமிழ் தேச தன்னுரிமை கட்சியின் தமிழக மக்கள் தன்னாட்சி மாநாடு திருநெல்வேலியில் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அதில், சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மத்திய மாநில அரசுகளை மட்டுமல்லாது அதிமுகவையும் விமர்சித்து பேசினார்

தமிழர்களின் பண்பாடு, பாரம்பரியம் பற்றி பேசிய சீமான், தெற்காசிய முழுதும் பரவி வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்று ஆய்வறிக்கைகள் சொல்கிறது. தமிழ் முன்னோர்கள் வைத்திருந்த வாளை நம்மால் இப்போது தூக்க கூட முடியாது. ஆனால் அந்த காலத்தில் அவர்கள்  வாளைதூக்கி குதிரை மேல் நின்று வீசியுள்ளனர். பீட்சா பர்கர் சாப்பிடும் நம்மால்  அதனை தூக்க கூட முடியாது என்று கூறினார்.

தமிழனுடைய அறிவு நெற்களஞ்சியம் போல்  உலகம் முழுவதும் கொட்டி கிடக்கிறது என்றும், 6 லட்சம் கோடி கடன் தமிழக அரசுக்கு இருக்கும் போது 80 கோடியில் பேனா வைக்க திமுக திட்டம் போடுவது ஏன் என்று விமர்சித்த அவர், இலங்கையில் அதிகாரமும் இல்லை அரசும் இல்லை இந்த நிலையிலும் தமிழ் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று வேதனை தெரிவித்தார்.

எல்லை தாண்டி வந்ததாக கேரள மீனவர்கள் ஒருவர்கூட இதுவரை கைது செய்யப்பட்டது கிடையாது.அதற்கு காரணம் கேரளவின் ஆட்சியாளர்கள், ஆனால், தமிழகத்தை வெளியே இருந்து வந்தவர்களே ஆட்சி செய்கிறார்கள்.இந்த மண்ணை சேர்ந்த 2 பேர் அடிமையாகி இருக்கிறார்கள், இதனால் தான் தமிழக மீனவர்கள் கஷ்டத்திற்கு விடிவுகாலம் கிடைக்கவில்லை என விமர்சித்தார்.

மேலும் படிக்க | படுகொலையில் முடிந்த தண்ணீர் பிடி தகராறு... 8 வருடத்திற்கு பிறகு குடும்பத்திற்கே கிடைத்த தண்டனை

அதேபோல, பெருந்தலைவர் காமராஜரின் பணிகளை பாராட்டிய சீமான், திராவிட மாடல் பல்லாயிரம் குடிப்பகங்களை திறந்து குடிக்க வைக்கிறது என்று சாடினார். மேலும், நீரை தேக்கிவைக்க பல வழிகள் இருந்தும் அதனை செய்யாமல் 50 ஆயிரம் கோடி செலவு செய்து கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை அமைக்க இருக்கிறார்கள் என்று தெரிவித்த அவர்,  ஓடி வரும் நதியில் நமக்கு தேவையான நீரை சேமிக்கும் நிலை என்று உருவாகிறதோ அன்று தான் நாடு உருப்புடும் என்று கூறினார்.

அதிகபட்சமாக 4 அல்லது 5 ஆண்டுகளில் தமிழகத்தில் நான் தான் என்று கூறிய சீமான், தமிழகத்தில் இருந்து கிடைக்கும் அனைத்து வளமும் நமக்கு தான் என்று தெரிவித்ததுடன், என்னை தீவரவாதி போல் சித்தரிக்கின்றனர் என்றும் தெரிவித்தார். 

ஜப்பானில் கடல் அலையில் மின்சாரம் தயாரிக்கிறார்கள் அந்த தொழில் நுட்பத்தை ஏன் நாம் பயன்படுத்தமுடியவில்லை என்று கேள்வி எழுப்பிய சீமான், காற்றாலை சூரிய ஒளி மின்சாரத்தை தனியார் நிறுவனங்கள் செய்கிறது என்றும், ஆனால் பாதிப்பை ஏற்படுத்து அணு மின்சாரம் அனல் மின்சாரம் ஆகியவையை அரசு தான் உற்பத்தி செய்கிறது என்றும் சாடினார். 

மின்சாரம் உற்பத்தி செய்யும் அதானி வளம் பெறவேண்டும் என்ற நோக்கில் தான் மின்சாரத்தின் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு வற்புறுத்துகிறது என்று மத்திய அரசை சாடிய சீமான், நிலக்கரியை தனியாரிடம் வாங்க மத்திய அரசு வற்புறுத்தி வருகிறது என சந்திரசேகர ராவ் சொல்கிறார். யார் அந்த தனியார் என்று பார்த்தால் அதானி என்று மத்திய அரசு மீது குற்றம் சாட்டினார். 

மேலும் படிக்க | ‘இதெல்லாம் தேவையில்லாத சேட்டை’ - தமிழக அரசை எச்சரிக்கும் சீமான்

ஒற்றை கட்சி ஆட்சி முறையை ஒளித்து கூட்டாட்சி முறையை கொண்டுவர வேண்டும் என்றும், மத்திய அரசை அனுசரிக்கவில்லை என்றால் அங்கிருந்து பணம் வராது என்ற நிலை ஏன் என்று கேள்வி எழுப்பிய சீமான், இந்தியாவின் பொருளாதரத்தை நிறைவேற்றுவதில் முதலிடத்தில் மராட்டிய மாநிலமும், இரண்டாவது இடத்தில் தமிழ்நாடும் உள்ளது என்பதை சுட்டிக் காட்டியதோடு, மத்திய அரசிடம் விமானம், விமானநிலையம், துறைமுகம், கல்வி என எதுவும் கிடையாது. அனைத்தும் தனியார் வசம் போய் கொண்டிருக்கிறது என்று சாடினார். 

சுடுகாட்டுக்கும் ஜி.எஸ்.டி விதிக்கப்படுகிறது, நாடா இது சுடுகாடா என்பதே தெரியாமல் கொடுமையாக போய்கொண்டிருக்கிறது என்றும், காருக்கு ₹6 லட்சம் சாலை வரி எடுக்கப்படுகிறது என்றும், தண்ணீர், சாலை மின்சாரம், கல்வி உள்ளிட்ட அனைத்துக்கும் வரி விதிக்கப்பட்டுவிட்டு அனைத்தையும் தனியாரிடம் பெறவேண்டியுள்ளது என்றும் சாடினார். 

75% தமிழ்நாட்டு வரி தமிழருக்கு 25% பொது நிதி என்பதே சீமானின் நிலை, பொது வரிக்கான கணக்கு கட்டாயம் காட்டவேண்டும், எல்லா உரிமையையும் இழந்துவிட்டு அடிமையாக வாழ நாங்கள் தயாராக இல்லை என்றும் கூறினார். 

மக்களுக்கான அரசு உருவாக வேண்டும் அது நாம் தமிழர்கட்சியின் அரசாக இருக்கும் என்று கூறிய சீமான், முதலமைச்சர் ஸ்டாலின் அவரது மகனுக்கு முடி சூட்ட காத்திருக்கிறார் என்று திமுகவை சாடினார். எடப்பாடி பழனிசாமி கட்சி ஆரம்பித்தால் அவரது மகன் மனைவிகூட சேர்ந்திருக்கமாட்டார்கள் என்று அதிமுகவை விமர்சித்தார்.

செய் அல்லது செத்து மடி என்பது பழசு செய் அல்லது சாகடி என்பது எங்கள் கோட்பாடு என்றும், இந்திய நாடு இரண்டாக பிரிக்கும் நிலை விரைவில் உருவாகும் என்றும் பேசிய அவர், திராவிட நாடு என இவர்கள் சொல்வதற்கு பதில் தென் இந்தியா என சொல்லிருக்கலாம்

அனைத்து சட்டங்களையும் நாட்டில் பாராளுமன்ற விவாதம் செய்து கொண்டுவருவதல்ல அனைத்தும் நீதிமன்றத்தின் உத்தரவில் தான் அமலுக்கு வருகிறது. என்று பேசினார். இந்தக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் நூற்றுக்கணக்கானக்கில் கலந்துக் கொண்டனர்.

மேலும் படிக்க | பெண் குழந்தைகளை ஆசிரியர்கள் கவனமுடன் கையாள வேண்டும் - தமிழிசை சௌந்தரராஜன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News