எடப்பாடி பழனிச்சாமி ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுக்காததால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கடன் வாங்கி கட்ட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது, ஒன்றிய அரசு விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டும் எனும் நம்பிக்கை உள்ளது என மதுரையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1 கோடியே 60 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் கட்டிடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் திறந்து வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், "தமிழகத்தில் 50 இடங்களில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் பணிகள் நிறைவுறும் தறுவாயில் உள்ளது. பணிகள் முடிவுற்றவுடன் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும். மதுரை எம்ய்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து முடிக்க நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். நாடாளுமன்றத்தில் பேசிய ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் மதுரை எம்ய்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் தோல்வியை ஒப்புக் கொள்ளும் வகையில் பேசியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மதுரை எம்ய்ஸ் மருத்துவமனையை விரைவில் கட்டுவோம் என கூறியுள்ளார். தமிழக அரசின் சார்பில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்ட வலியுறுத்த உள்ளோம். ஒன்றிய அரசு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மட்டும் ஜப்பான் நிதி என அறிவித்த நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒன்றிய அரசின் நேரடி நிதியை பெற்று இருந்தால் இன்றைக்கு எம்ய்ஸ் மருத்துவமனை பயன்பாட்டுக்கு வந்திருக்கும். எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைக்காத காரணத்தால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கடன் வாங்கி கட்ட வேண்டிய சூழலானது.
எம்ய்ஸ் மருத்துவமனை கட்டும் பணியும் தள்ளிக் கொண்டே செல்கிறது. தமிழ்நாடு மருத்துவக் கல்லூரியில் எம்ய்ஸ் மருத்துவமனை மாணவர்கள் 4 ஆவது ஆண்டாக கல்வி பயில்கிறார்கள். காலம் கனிந்து வரும் ஒன்றிய அரசு விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டும் எனும் நம்பிக்கை உள்ளது. உடல், உறுப்பு தான அறுவை சிகிச்சை மேற்க் கொள்ள தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டு உள்ளது. மக்களிடம் உடல், உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. கர்ப்பிணி தாய்மார்களுக்கு நிலுவையில் உள்ள பழைய அரசின் நிதியுதவி படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது" என கூறினார்.
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 234/77 ஆய்வுத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் அனைத்துத் தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். அவ்வகையில் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சின்னாளப்பட்டி கிளை நூலகத்தைப் பார்வையிட்டு வாசகர்களுடன் கலந்துரையாடினார். நூலகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரங்கத்தைப் பார்வையிட்டு, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். நூலகத்தின் மேம்பாட்டிற்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் உறுதியளித்தார்.
தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட மைய நூலகத்திலும் திடீர் ஆய்வு மேற்கொண்டு சுகாதார வளாகம், புதிதாக கட்டப்பட்டுள்ள வாசகர் அரங்கம் போன்றவற்றை பார்வையிட்டு வாசகர்களுடன் கலந்துரையாடினார். புதிய அரங்கத்தை விரைவில் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். நூலகத்தின் மாடியில் உள்ள பயன்பாடு இல்லாத பொருட்களை உடனே அப்புறப்படுத்துமாறும் அறிவுறுத்தினார். திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியோடு சேர்த்து இதுவரையில் 156 தொகுதிகளுக்கு நேரடியாக சென்று திடீர் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ