அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கோவை, சென்னை, கோவை, திருச்சி, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், செங்கல்பட்டு, ஆந்திரா, கர்நாடகா என 69 இடங்களில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், அதிமுக அரசு, இந்த நடவடிக்கை உள்நோக்கத்துடன் எடுக்கப்படும் நடவடிக்கை என கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.
அதிமுகவில் உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், தொண்டர்களின் உற்சாகத்தை கண்டு, காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசு, லஞ்ச ஒழிப்பு துறையை, ஏவல் துறையாக மாற்றி, செயல்பட்டு வருவதாக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த, தமிழக வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடைபெறும் சோதனையில் எந்த உள் நோக்கமும் கிடையாது என தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் இருக்கும் போதே அவர்களின் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்றது என்றும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடைபெறும் சோதனையில் திமுக அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை எனவும் அவர் மேலும் கூறினார்.
ALSO READ | கிரிப்டோவில் முதலீடு; அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் விஜிலன்ஸ் ரெய்டு
முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் , கே.சி.வீரமணியை தொடர்ந்து தங்கமணி வீட்டில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. 2016 முதல் 2020 மார்ச் வரை வருமானத்துக்கு அதிகமாக ரூ. 4.85 கோடி சொத்து சேர்த்ததாக தங்கமணி மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் கூறிய அமைச்சர், “லஞ்ச ஒழிப்பு துறை கடந்த வாரம் பத்திர பதிவு துறையில் கூட சோதனை நடத்தி உள்ளார்கள்; எனவே முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடைபெறும் சோதனையில் எந்த உள் நோக்கமும் கிடையாது. இது சட்ட நடவடிக்கை; இதை அரசியலாக்க வேண்டாம்” என்றார்.
திமுக மாவட்ட செயலாளர்கள் வசம் காவல்துறை உள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை சொல்வது தவறு. யார் தவறு செய்தாலும் காவல்துறை தண்டிக்கும். திமுகவினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி மதுரையில் பேட்டி அளிக்கையில், மீனாட்சி அம்மன் கோவில் சொத்துக்கள் தவறாக பதிவு செய்யபட்டு இருந்தால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தவறான பதிவுகளை ரத்து செய்யும் சட்ட முன் வடிவு அமலுக்கு வந்தால் இது போன்ற முறைகேடுகள் முற்றிலும் தடுக்கப்படும் என்றார்.
ALSO READ | அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR