கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா மையம் அமைந்துள்ளது. இங்கு பல நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதேசமயம் எந்த அளவுக்கு பிரபலம் அடைந்திருக்கிறதோ அதே அளவு சர்ச்சைகளையும் சம்பாதிக்கும் இடமாகவும் ஈஷா யோகா மையம் இருக்கிறது. குறிப்பாக பல்லாயிரக் கணக்கான ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு இந்த யோகா மையம் அமைந்திருப்பதாகவும், சுற்றுச்சூழலுக்கு ஏகப்பட்ட ஆபத்து ஏற்படுகிறது எனவும், வன விலங்குகளுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் பல குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுகின்றன. மேலும் சிவராத்திரி அன்று ஈஷா யோகா மையத்தில் நடக்கும் நிகழ்ச்சியும் கடும் விமர்சனங்களை சந்தித்துவருகிறது.
இந்தச் சூழலில் விதிகளை மீறி கட்டடங்கள் கட்டியதாக ஈஷா அறக்கட்டளைக்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நோட்டீஸுக்கு தடை விதிக்கக் கோரி ஈஷா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கானது விசாரணையில் உள்ள நிலையில், சென்னையை சேர்ந்த வன விலங்குகள் பாதுகாப்பு ஆர்வலர் முரளிதரன் என்பவர் , தன்னையும் இந்த வழக்கில் சேர்க்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும் படிக்க | ஆளுநரே திமுகவை தட்டிக்கேளுங்கள் - எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
அதில், ஈஷா அறக்கட்டளை அமைந்துள்ள இடத்திற்கு அருகே யானைகள் தண்ணீர் தேடி வரும் இடம் இருக்கிறது. யானைகள் வழித்தடங்கள் அடைக்கப்பட்டுள்ளதால் அவை ஊருக்குள் நுழையும் அபாயம் இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் 150க்கு மேற்பட்ட யானைகள் இறந்திருக்கின்றன. வழித்தடம் அடைக்கப்பட்டுள்ளதால் ஊருக்குள் வந்த யானைகள் தாக்கியதில் சுமார் 160க்கும் மேற்பட்ட மனிதர்கள் இறந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி இந்து உணர்வுகளை புண்படுத்தும் வகையில் சிவராத்திரி இரவுகளில், டிஸ்கோ நடனம் நடத்துவதுடன், அதிக டெசிபல் ஒலி ஏற்படுத்துவதால், வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்படுகிறது. காடுகளில் இருந்து 100 மீட்டர் தொலைவில் தினசரி ‘ஆதி யோகி’ லேசர் ஷோ நடத்தப்படுகிறது. எனவே ஈஷா அறக்கட்டளை தாக்கல் செய்துள்ள மனுவில் என்னையும் எதிர்மனுதராக சேர்க்க வேண்டும்” என குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த வழக்கின் விசாரணையானது பொறுப்பு தலைமை நீதிபதி டி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதிகள் நவம்பர் 28ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ