பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தையை பணத்திற்காக விற்ற தாய்

போலீஸார் விசாரணை தீவிரமடையும் நிலையில் ஜெகன் என்பவர் தனது மனைவி சந்தியாவுடன் காவல் நிலையத்தில் தாமாகவே ஆஜராகி தான் தொலைக்காட்சிகளில் குழந்தை விற்கப்பட்ட செய்தி பார்த்ததாகவும் யாஸ்மின் கூறி உள்ளார்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 29, 2021, 07:12 PM IST
பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தையை பணத்திற்காக விற்ற தாய் title=

சென்னை புழல் காவாங்கரையை கே எஸ் நகர் பகுதியை சேர்ந்த யாஸ்மின், மோகன் தம்பதியினருக்கு  கடந்த 11 வருடத்திற்கு முன்பு திருமணமாகி 10  வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் 5 மாத கற்பிணியாக இருந்த யாஸ்மினை கணவர் மோகன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கணவர் விட்டு சென்றதால் பிறக்கவிருக்கும் குழந்தையை வளர்க்க வழியின்றி தவித்து வந்த நிலையில் யாஸ்மினுக்கு ஆஸ்துமா இருக்கும் காரணத்தால் சிகிச்சைக்காக அடிக்கடி எல்லீஸில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று வந்ததால் அங்கே பழக்கமான எண்ணூரை சேர்ந்த ஜெயகீதா (49) என்பவரிடம் குழந்தை கலைக்க ஆலோசனை கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து  ஜெயகீதா கருக்கலைப்பு செய்ய வேண்டாம் என்றும் குழந்தை பிறந்தவுடன் தன்னிடம் கொடுத்தால்  அதிக பணத்திற்கு விற்று தருவதாக கூறியிருக்கிறார்.  அது நல்ல முடிவாக தெரிந்ததால் யாஸ்மின் ஒப்புக்கொண்டுள்ளார். அதன்பின்னர் ஜெயகீதாவே அவரை பராமரித்து வந்துள்ளார். கடந்த 21 ஆம் தேதி வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் யாஸ்மினுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. நான்கு நாட்கள் மருத்துவமனையில் இருந்த நிலையில் கடந்த 24 ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து குழந்தையுடன் யாஸ்மின் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். அடுத்த நாள் யாஸ்மீன் தனது மகள் மற்றும் ஜெயகீதா ஆகியோருடன் என்பவர் பிறந்து 5 நாட்கள் ஆன ஆண் கைக்குழந்தையை எடுத்துக்கொண்டு புரசைவாக்கத்திற்கு வந்ந்திருக்கிறார். அப்போது அங்கு  எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த தனம் என்பவருடன் வந்த தம்பதியினர் யாஸ்மீனிடம் வெற்று முத்திரை தாளில் கையொப்பம் வாங்கியுள்ளார். பின்பு குழந்தையை அவர்களிகளிடம் கொடுத்த ஜெயகீதா தம்பதியினரிடம் இருந்து பணத்தை வாங்கி கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட யாஸ்மின் தனது மகளுடன் வீட்டிற்கு செல்ல ஆட்டோவில் வரும்போது புளியந்தோப்பு ஆட்டுதொட்டி அருகில் வந்தபோது இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத 2 நபர்கள் ஆட்டோ டிரைவரிடம் முகவரி கேட்பது கேட்டு யாஸ்மின் கையிலிருந்த பணத்தையும் பறித்து சென்றனர்.

asdf

பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தையை பணத்திற்கு விற்ற யாஸ்மின் வழக்கறிஞர்களுடன்  வேப்பேரி காவல் நிலையம் வந்து தனது குழந்தையை தனம் என்பவருடன் வந்த இரண்டு நபர்கள் குழந்தையை தன்னிடம் இருந்து ஏமாற்றி வாங்கி சென்று விட்டதாகவும், குழந்தையை மீட்டு தரும்படியும் கடந்த 27.11.2021-ம் தேதி இரவு  புகார் அளித்துள்ளார். புகாரில் குறிப்பிடப்பட்டிருந்த  இடைத்தரகராக செயல்பட்ட ஜெயகீதா, தனம், லதா, ஆரோக்கிய மேரி ஆகியோரை பிடித்து விசாரணை செய்ததில் குழந்தை சென்னை மூல கொத்தளத்தில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் சென்ற போலீசார் குழந்தையை மீட்டனர்.  மேற்கொண்டு அவர்களிடம் விசாரணை நடத்தியதில் ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த சிவக்குமார் மற்றும் அவரது மனைவி ஸ்ரீதேவி ஆகியோர் கடந்த 25 ஆம் தேதி அன்று குழந்தையை விலைக்கு வாங்கி ஸ்ரீதேவியின் தாயார் வீடான 
மூலகொத்தளத்தில் தங்கி இருந்திருக்கின்றனர்.

adsf

ஸ்ரீதேவியின் கணவர் சிவக்குமாரும் இடைத்தரகர் ஆரோக்கிய மேரியும் ஒரு அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். சிவகுமாருக்கு கடந்த 13 வருடங்களாக குழந்தை இல்லை என்பது ஆரோக்கிய மேரிக்கு தெரியும். அவர் கொடுத்த யோசனையில் அவர் மூலம் தனம், ஜெயகீதா ஆகியோர் மூலம் யாஸ்மினிடமிருந்து குழந்தையை விலை கொடுத்து வாங்கியுள்ளனர்.  இதில் போலீஸாருக்கு அதிர்ச்சியூட்டிய விஷயம் யாஸ்மீனிடம் பணம் வழிப்பறி செய்யப்படவில்லை, யாஸ்மின் புகார் பொய்யாக புனையப்பட்டது என்று தெரியவந்தது. யாஸ்மின் பயணித்த ஆட்டோ எண்ணை சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டறிந்து அதன் டிரைவரை கண்டு பிடித்து போலீஸார் விசாரித்ததில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்றும், வீட்டில் அவரை பத்திரமாக கொண்டு இறக்கிவிட்டதாகவும், அவர் தனக்கு பணம் கொடுத்து அனுப்பி விட்டார் என்று தெரிவித்துள்ளார்.

ALSO READ திமுக ஒன்றியச் செயலாளர் உட்பட 3 பேர் மீது கொலை வழக்கு பதிவு

போலீஸார் விசாரணை தீவிரமடையும் நிலையில் ஜெகன் என்பவர் தனது மனைவி சந்தியாவுடன் காவல் நிலையத்தில் தாமாகவே ஆஜராகி தான் தொலைக்காட்சிகளில் குழந்தை விற்கப்பட்ட செய்தி பார்த்ததாகவும், அது குறித்து யாஸ்மின் புகார் கொடுத்ததாகவும், அதில் பணத்தை யாரோ கொள்ளை அடித்து சென்றதாக யாஸ்மின் கூறி உள்ளார், ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்றால் அந்தப் பணம் தன்னிடம் தான் இருந்தது என்றும் பணம் பறிபோனதாக புகார் அளித்த யாஸ்மின் தான் தன்னை தொலைபேசியில் அழைத்து ஜீவா பார்க் அருகே வரவழைத்து பணத்தை கொடுத்து பத்திரமாக வைக்கச் சொல்லி மறுநாள் மாதாவரம் அருகே வரவழைத்து பணத்தை திரும்ப பெற்றுக் கொண்டதாகவும் இந்த தகவலை தெரிவிக்கவே காவல் நிலையம் வந்ததாக தெரிவித்துள்ளார்.

இதனால் கடுப்பான போலீஸார் எங்கள் நேரத்தை விரையம் செய்கிறாயா என யாஸ்மினிடம் விசாரணை நடத்த, பயந்துப்போன யாஸ்மின் தனது குழந்தையை திரும்ப மீட்கவே தான் அப்படியெல்லாம் நாடகம் ஆடியதாக ஒப்புக்கொண்டார். இந்நிலையில் யாஸ்மின் மற்றும் குழந்தையை அமைந்தகரையில் உள்ள சுரபி காப்பகத்தில் போலீஸார் தங்க வைத்தனர். இதில் புரோக்கர்களாக செயல்பட்ட தனம் மற்றும் ஜெயகீதாவை கைது செய்தனர். இப்புகார் சம்பந்தமாக குழந்தையை விலைக்கு வாங்கிய சிவகுமார், ஆட்டோ டிரைவர் செய்யது தஸ்தகீர், ஜெகன் ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகளை விற்பனை செய்யும் கும்பல் பெரிய அளவில் இயங்கி வருகிறது. இதற்கென்றே இவர்கள் ஆதரவற்ற, வறுமையில் உள்ள, கணவனால் கைவிடப்பட்ட அல்லது 2 பெண் குழந்தைகள் இருந்து 3 வதும் பெண் குழந்தை பெறும் பெண்களை குறிவைத்து அரசு மருத்துவமனைகளில் சுற்றி வருகின்றனர். இவர்கள் ஒருபெண் கர்ப்பக்கால பரிசோதனைக்கு வரும்போதே இனங்கண்டு மனதை மாற்றும் வேலைகளிலும் இட்டுபடுகின்றனர் என்கின்றனர் போலீஸார்.

ALSO READ மகளை தாக்கி ஆபாசமாக பேசியதால் தந்தை தீக்குளிக்க முயற்சி -கோவையில் பரபரப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News