உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், வைரஸ் தாக்காமல் காரைக்குடியில் உள்ள ஹோட்டலில் புதிய விளம்பரம் செய்துள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி அந்நாட்டு மக்களிடையே தொடர் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. பின்னர் இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவியது.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற தடுப்பு மருந்துகளை கண்டறியும் சோதனைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், யுகான் உள்ளிட்ட சீன நகரங்கள் முற்றிலுமாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 304 ஆக உயர்ந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. மேலும் இதுவரை 12 ஆயிரம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் சீனா மட்டுமின்றி தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தாய்லாந்து சிங்கப்பூர் ஆஸ்திரேலியா என இதுவரை 21 நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. சீனாவின் ஊஹானில் இருந்து கேரளா திரும்பிய மருத்துவ மாணவி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த தற்போது வரை தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டறியப்படாத நிலையில், பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் பணிகள் மட்டுமே தற்போது நடந்து வருகிறது.
இதற்கிடையில், காரைக்குடியில் உள்ள பிரபல ஹோட்டலான பிரெசிடெண்ட், “கொரோனா வைரஸ் வராமல் தடுக்க சின்ன வெங்காய ஊத்தப்பம் சாப்பிடுங்கள்” என்று போர்டு வைத்துள்ளனர். இது தொடர்பாக ஹோட்டல் உரிமையாளரிடம் பேசுகையில், “65 ஆண்டுகாலம் எங்களது ஹோட்டல் பாரம்பரியம் உடையது. சின்ன வெங்காயம் நல்ல நோய் எதிர்ப்பு சக்தி மருந்தாகும். சின்ன வெங்காயம் மற்றும் நல்லண்ணெய் ஆகியவை சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்.
ஆனால், தற்போதைய தலைமுறையினருக்கு சின்ன வெங்காயத்தின் அருமை தெரியவில்லை. இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தவே இப்படி ஒரு போர்டு வைத்தோம். சின்ன வெங்காயம் அதிகம் சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால், எந்த வைரஸும் தாக்காது” என்று கூறினார்.
Tamil Nadu: A hotel owner in Karaikudi claims that eating small onions can help prevent #coronavirus. He says, "According to Siddha medicine system, small onions provide resistance to flu based diseases. So, we are offering Uthappam with small onions to the customers". pic.twitter.com/xj7a3SCrdC
— ANI (@ANI) February 2, 2020