சென்னை: தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு வைக்க எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பொதுத்தேர்வு உறுதியாக வைக்கப்படும் என்றும், அதற்கான அட்டவணையை தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கல்வியாண்டு முதல் தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால் அரசியல் கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். ஆனாலும் அதையும் மீறி, மாணவர்களின் கல்வி திறனை வளர்க்கவே, பொதுத் தேர்வு வைக்கப்படுகிறது என்றும், அதன் பலன் மாணவர்களுக்கே கிடைக்கும். யாரும் பயப்பட வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் பொதுத் தேர்வு நடைபெரும் என்றும், அதற்கான கால அட்டவணையை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிடப்பட்டுள்ளது. அதில் 5 ஆம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம் கணிதம் பாடங்களுக்கும், 8 ஆம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடத்திற்கு பொதுத்தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது 5 ஆம் வகுப்புக்கு மூன்று பாடங்களுக்கும், 8 ஆம் வகுப்புக்கு ஐந்து பாடங்களுக்கும் பொதுத்தேர்வு நடைபெறும் என அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
5 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: மார்ச் 14 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடைபெறும்.
தமிழ்: 15 ஏப்ரல் 2020
ஆங்கிலம் - 17 ஏப்ரல் 2020
கணிதம் - 20 ஏப்ரல் 2020
வினாத்தாள் படிப்பதற்கு மாணவர்களுக்கு 10 நிமிடம், அடுத்து விவரங்களை பதிவு செய்ய 5 நிமிடங்கள் வழங்கப்படும். தேர்வு காலை 10.15 மணிக்கு தொடங்கி 12.15 மணி வரை நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: மார்ச் 30 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 17 ஆம் தேதி முடிவடையும்.
தமிழ் - 30 மார்ச் 2020
ஆங்கிலம் - 02 ஏப்ரல்2020
கணிதம் - 08 ஏப்ரல் 2020
அறிவியல் - 15 ஏப்ரல் 2020
சமூக அறிவியல் - 17 ஏப்ரல் 2020
மேலும் வினாத்தாள் படிப்பதற்கு மாணவர்களுக்கு 10 நிமிடம், அடுத்து விவரங்களை பதிவு செய்ய 5 நிமிடங்கள் வழங்கப்படும். தேர்வு காலை 10.15 மணிக்கு தொடங்கி 12.15 மணி வரை நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, “ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 2018-19 ஆம் கல்வியாண்டில் இருந்து பொதுத் தேர்வு” என்று, பெற்றோரும் இளம் மாணவ மாணவியரும் அதிர்ச்சிக்கு ஆளாகி மன அழுத்தத்தினால் அல்லலுறும் வகையில், அ.தி.மு.க அரசு அறிவித்திருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய பா.ஜ.க. அரசின் புதிய கல்விக் கொள்கையை அப்படியே அடிமைத்தனமாக நகல் எடுத்து அட்சரம் பிசகாமல் அ.தி.மு.க அரசு செயல்படுத்துவது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பள்ளிக் கல்வி அமைச்சராக உள்ள செங்கோட்டையன் ஆகியோரின் “குதர்க்க மனப்பான்மை”யைப் பிரதிபலிக்கிறது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனத்தை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.