தொற்று நோயை தடுத்திட 30 நடமாடும் மருத்துவ முகாம்கள்

Last Updated : Nov 3, 2017, 02:38 PM IST
தொற்று நோயை தடுத்திட 30 நடமாடும் மருத்துவ முகாம்கள் title=

இன்று (03.11.2017) தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் அரசு
பொது மருத்துவமனையினையில் வெள்ள தடுப்பு பணிகளை திடீர் ஆய்வு ஆய்வு செய்தார். பின்னர், சிறுவஞ்சேரி, அகரம் மெயின்ரோட்டில் நடமாடும் மருத்தவ வாகனம் மூலம் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமினை பார்வையிட்டு பொதுமக்களுக்கு பிளிச்சீங் பவுடர் வழங்கினார்.

பின்னர் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: 

தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் தொற்று நோயை தடுப்பதற்காக 30 நடமாடும் மருத்துவமுகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளது. மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப துறையின் மூலம் 15 மருத்துவ முகாம்களும், சென்னை மாநகராட்சி மூலம் 15 மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டு உள்ளன. 

மேலும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப துறையின் மூலம் 100 சிறப்பு மருத்துவ முகாம்கள் மற்றும் குளோரினேஷன் குழுக்கள் 20 அமைக்கப்பட்டு உள்ளன. நடமாடும் மருத்துவ முகாம்களில் 2 மருத்துவர்கள், செவிலியர்கள், மருயதாளுனர்களுடன் சுகாதார ஆய்வாளும் உள்ளனர். இவர்கள் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளுக்கு சென்று தொற்று நோய் ஏற்படாத வண்ணம் பணியாற்றுவர். மேலும் குடிநீர் உள்ள தொட்டிகள், மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் உள்ள குளோரினேஷன் செய்த குடிநீரை பயன்படுத்த பொதுமக்களுக்கு 250 முதல் 500 கிராம் வரை பிளிச்சிங் பவுடர் வழங்குவர். இது தண்ணீர் கிருமி நாசினியாக
செயல்படும். மேலும் பொது சுகாதாரத் துறையின் மூலம் காய்ச்சிய நீரை பருகவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது எனக் கூறினார்.

Trending News