தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடியில் போலீஸ் வாகனத்திற்கு தீ வைப்பு!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நேற்று 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தங்கள் உரிமைக்காகவும், தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனக்கூறி அமைதி பேரணியாக பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி சென்றனர்.
அப்பொழுது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியாதால், போலீஸ் மற்றும் பொது மக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் மோதலாக மாறியது. இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் 10 உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து பலரும் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், சாலையோரம் நின்றுகொண்டிருந்த காவல்துறை வாகனத்திற்கு தீ வைத்துள்ளனர். இதை தொடர்ந்து, இச்சம்பவம் பற்றி விசாரணைசெய்து வருகின்றனர்.
TamilNadu: A bus was set ablaze by protesters outside General Hospital in Tuticorin #SterliteProtest pic.twitter.com/kmX4tn9G3v
— ANI (@ANI) May 23, 2018