மே 25-ம் தேதி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு!!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும் வருகின்ற மே 25-ம் தேதி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு!

Last Updated : May 23, 2018, 05:37 PM IST
மே 25-ம் தேதி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு!! title=

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும் வருகின்ற மே 25-ம் தேதி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நேற்று 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இதை தொடர்ந்து காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் 10 உயிரிழந்துள்ளனர். 

இதை தொடர்ந்து, மீண்டும் இன்று மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஒருவர் உயிரிழந்தனர். மூன்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் நாமக்கலில் தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்களின் கூட்டமைப்பு நடைபெற்றது. அதில்,  தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும் வருகின்ற மே 25-ம் தேதி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு நடத்தபடுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

 

Trending News