மர்ம கும்பளால் மும்பைக்கு கடத்தப்பட்ட 18 சிறுமிகள் மீட்பு!

இந்திய நேப்பாளம் எல்லைப்பகுதியில் கடத்தப்பட்ட 18 சிறுமிகள் எல்லையோற பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்!

Last Updated : Apr 9, 2018, 04:12 PM IST
மர்ம கும்பளால் மும்பைக்கு கடத்தப்பட்ட 18 சிறுமிகள் மீட்பு! title=

பாய்ரச்: இந்திய நேப்பாளம் எல்லைப்பகுதியில் கடத்தப்பட்ட 18 சிறுமிகள் எல்லையோற பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்!

இந்திய நேப்பாளம் எல்லைப் பகுதியின் ரூப்பாய்தியா பகுதியில் மர்ம கும்பளால் கடத்தப்பட்ட 18 சிறுமிகள் எல்லைப் பாதுகாப்பு படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

விசாரணையில் இச்சிறுமிகள் மும்பை வழியாக சிம்லாவிற்கு கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக கமல் கௌதம், சூரத் சிங், சாந்த் பஹதூர் மற்றும் அகம்து ஹூசைன் என்னும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட சிறுமிகள் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதில் 6 சிறுமிகள் மும்மை நகரத்திற்கும், 12 சிறுமிகள் சிம்லா நகரத்திற்கு விற்கப்பட்டுள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் காவல்துறை கண்கானிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News