இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் 33வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். இதுவரை இந்திய அணிக்காக 7 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கும் அவர், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் நம்பிக்கை நாயகனாக பல போட்டிகளில் இருந்துள்ளார். ஆனால் அவருக்கு இதுவரை ஒரே ஒரு தீராத குறை இருந்து கொண்டிருக்கிறது. அதுஎன்னவென்றால் இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் விளையாட வேண்டும் என்பது தான். ஆனால் இதுவரை அந்த கனவு என்பது நிறைவேறாமலேயே இருந்து வருகிறது. அண்மையில் பேட்டி ஒன்றில் பேசும்போதுகூட இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என விரும்புவதாக தெரிவித்திருந்தார்.
யுஸ்வேந்திர சாஹலின் பயணம்
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் ஐபிஎல் 2016-சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம் இந்திய அணியின் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்த அவர் இந்திய அணியிலும் தேர்வானார். இந்த அதிர்ஷ்டத்தை யுஸ்வநேதிர சாஹல் தவறவிடவில்லை. டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் முத்திரை பதித்தார். இவரின் துல்லியமான பந்துவீச்சால் இந்திய அணி பல இக்கட்டான போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. அப்படி இருந்தும் அவரால் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட இந்திய அணிக்காக விளையாட முடியவில்லை.
மேலும் படிக்க | இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்? பிசிசிஐ எடுக்கும் முக்கிய முடிவு!
இந்திய அணிக்காக சாதனை
யுஸ்வேந்திர சாஹல் 2016 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக தனது முதல் ஒருநாள் போட்டியில் விளையாடினார். அதே ஆண்டு டி20யிலும் அறிமுகமானார். அவர் இதுவரை இந்திய அணிக்காக 72 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 121 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதே நேரத்தில், யுஸ்வேந்திர சாஹல் இதுவரை 75 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார், அதில் அவர் 91 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
டெஸ்ட் அணியில் வாய்ப்பு
இது குறித்து யூடியூப் சேனலுக்கு யுஸ்வேந்திர சாஹல் பேட்டி கொடுக்கும்போது வெளிப்படையாக பேசினார். கிரிட்ராக்கருடன் உரையாடியபோது, 'எல்லோரும் தங்கள் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். என் கனவும் இப்படித்தான். நான் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் நிறைய சாதித்துள்ளேன். ஆனால் சிவப்பு பந்து கிரிக்கெட் இன்னும் விளையாட வேண்டியுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்று என் பெயருக்கு முன்னால் போடும் காலத்தை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன். எனது கனவு நனவாகும் வகையில், உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் ரஞ்சியில் எனது பெஸ்டை வழங்க முயற்சிக்கிறேன். விரைவில் எனக்கும் இந்திய டெஸ்ட் அணியுடன் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.
ஐபிஎல்லின் வெற்றிகரமான பந்துவீச்சாளர்
இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும் யுஸ்வேந்திர சாஹல் பெற்றுள்ளார். மேலும் இந்த ஐபிஎல் சீசனில், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் டுவைன் பிராவோவை பின்னுக்கும் தள்ளினார். ஐபிஎல் தொடரில் பிராவோ 183 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். யுஸ்வேந்திர சாஹல் இதுவரை ஐபிஎல்லில் மொத்தம் 187 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சாஹல் ஐபிஎல் 2023ல் 14 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
மேலும் படிக்க | டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட் ஸ்டுவர்ட் பிராட் சாதனை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ