யுஸ்வேந்திர சாஹல் மனைவியின் ரகசிய காதலன்; இன்ஸ்டாகிராமில் வெளியான புகைப்படம்

யுஸ்வேந்திர சாஹல் மனைவி தனஸ்ரீ வர்மாவின் ரகசிய காதலன் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 1, 2022, 07:30 AM IST
  • யுஸ்வேந்திர சாஹலுக்கு காத்திருந்த அதிர்ச்சி
  • மனைவியின் ரகசிய காதலின் புகைப்படம்
  • கிரிக்கெட் உலகில் ஏற்பட்ட பரபரப்பு
யுஸ்வேந்திர சாஹல் மனைவியின் ரகசிய காதலன்; இன்ஸ்டாகிராமில் வெளியான புகைப்படம் title=

சில மாதங்களுக்கு முன்பு யுஸ்வேந்திர சாஹலுக்கும், அவரது மனைவி தனஸ்ரீ வர்மாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அப்போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதற்கான காரணம் வெளியாகவில்லை. ஆனால் இந்த காரணம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தன்ஶ்ரீ வர்மாவின் ரகசிய காதலனும் வெளிச்சத்திற்கு வந்துள்ளார். இந்த ரகசிய காதலன் யார்? என்பதை தெரிந்தால் நீங்கள் கோபபடுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், தன்னுடைய ரகசிய காதலன் புகைப்படத்தை சாஹலின் மனைவி தனஸ்ரீ வர்மாவே சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தான் கிரிக்கெட் வட்டாரத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. 

மேலும் படிக்க | வயசானாலும்... அது மட்டும் மாறல - சின்ன தல ரெய்னாவின் மிரட்டல் கேட்ச்

தனஸ்ரீ வர்மா பதிவு என்ன?

தனஸ்ரீ வர்மா அண்மையில் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவைப் பகிர்ந்தார். இந்த புகைப்படங்களில், அவர் தனது செல்லக்குட்டி நாயான காபியுடன் இருக்கிறார். காபி என பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த நாய்க்கு அண்மையில் பிறந்தநாள் வந்துள்ளது. இதனை தான் செல்லமாக என்னுடைய சீக்ரெட் லவ்வர் என கூறி, அந்த நாய்க்குட்டியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும், என்னுடைய ரகசிய காதலனாக எப்போதும் நீங்கள் இருப்பீர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.   

நெட்டிசன்கள் ரியாக்ஷன்

சாஹல் மனைவியின் இந்தப் பதிவை பார்த்ததும், நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கிவிட்டனர். சிலர் அவரின் செல்லப் பிராணிக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர். அண்மையில் சாஹல் மற்றும் அவரது மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக தகவல் பரவியது. இதற்கு முக்கிய காரணம் சாஹலின் மனைவி தனஸ்ரீ வர்மா, தன்னுடைய சமூகவலைதள பக்கங்களில் இருந்து சாஹலின் பெயரை அதிரடியாக நீக்கினார். இதுவே பல யூகங்களுக்கும் காரணமாக அமைந்தது. இருவரும் விளக்கம் கொடுத்த பின்னரும்கூட வதந்தி இன்னும் தீயாக பரவிக் கொண்டே இருக்கிறது. 

மேலும் படிக்க | பார்ப்பதற்கே பல கோடி கண்கள் வேண்டும் - மாஸ்டர் பிளாஸ்டரின் மாஸான ஷாட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News