டாஸ் வென்று இந்தியா போட்டியை வெல்லுமா?

Last Updated : Aug 3, 2017, 11:11 AM IST
டாஸ் வென்று இந்தியா போட்டியை வெல்லுமா? title=

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் துவங்கியது. டாஸ் வென்று இந்தியா அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. 

இந்திய இலங்கை அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கொழும்பில் இன்று காலை துவங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி இலங்கை அணியை பௌலிங் செய்யுமாறு பணித்தது.

முதல் டெஸ்டில் காயம் காரணமாக இலங்கை அணியில் விளையாடாத கேப்டன் சன்டிமால் இன்றைய போட்டியில் களமிறங்குகிறார்.

இரண்டாவது டெஸ்ட்ல் இந்திய அணியின் சிறு மாற்றமாக அபினவ் முகுந்துக்கு பதிலாக கே. எல். ராகுல் களமிறங்குகிறார். மேலும் இன்றைய போட்டி புஜாராவுக்கு 50-வது டெஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

துவக்க ஆடகரர்களாக தவான் மற்றும் கே. எல். ராகுல் களமிறங்கினர். ஆட்டம் துவங்கியது முதல் நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்தனர். பின் 10.1 வது ஓவரில் தவான் 35(37) பெரேரா பந்தில் லேல்.பி.டபள்யூ மூலம் வெளியறினர்.  

தற்போதய நிலவரப்படி இந்திய 14 ஓவர் முடிவில் 63-1 எடுத்துள்ளது.

கே. எல். ராகுல் 26(36) மற்றும் பூஜார 2(11) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

Trending News