இலங்கை அணியை திணறடித்த யார்க்கர் மன்னன் நவ்தீப் சைனி...

இந்தூரின் ஹோல்கர் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தியா vs இலங்கைத் தொடரின் இரண்டாவது டி20 போட்டியின் போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி மீண்டும் தனது திறமையை தனுஷ்கா குணதிலகாவிடம் காட்டினார்.

Last Updated : Jan 8, 2020, 12:10 PM IST
இலங்கை அணியை திணறடித்த யார்க்கர் மன்னன் நவ்தீப் சைனி... title=

இந்தூரின் ஹோல்கர் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தியா vs இலங்கைத் தொடரின் இரண்டாவது டி20 போட்டியின் போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி மீண்டும் தனது திறமையை தனுஷ்கா குணதிலகாவிடம் காட்டினார்.

இப்போட்டியில் டாஸ் வென்ற பிறகு, இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீசத் தெரிவுசெய்தார், போட்டிக்காக மீண்டும் தனது பழைய சகாக்களையே அழைத்து சென்றார்.

ஆட்டம் விருவிருப்பாக சென்று கொண்டிருந்த நிலையில் ஆட்டத்தின் எட்டாவது ஓவரில் சைனியின் வேகமான யார்க்கருடன் களத்திற்கு வந்தார். அவரது பந்தினை எதிர்கொண்ட குணதிலக்காவுக்கு பந்து எதிர்கொள்ள இயலாத வேகத்தில் வந்தபோது, ​​அவருக்குப் பின்னால் இருந்த ஸ்டெம்புகளால் மட்டுமே பந்துக்கு பதில் சொல்ல முடிந்தது.

குறித்த இந்த ஆட்டத்தில் இது சைனியின் இரண்டாவது விக்கெட் ஆகும். இவரைத்தொடர்ந்து இந்திய பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்தினர், லங்கா பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். இறுதியில் இன்னிங்ஸை ஒன்பது விக்கெட் இழப்புக்கு 142 ரன்களில் முடித்தது இலங்கை.

அணியில் அதிகப்பட்சமாக குசல் பெரேரா 34 ரன்கள் எடுத்த்தார். தனஞ்சய டி சில்வா மற்றும் வாணிந்து ஹசரங்கா சில ரன்கள் எடுத்து இந்தியாவிற்கு 143 என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை, சைனி தனது நான்கு ஓவர்களில் 18 ரன்கள் மட்டும் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார், ஷார்துல் தாக்கூர் 3-23 என்ற புள்ளிகளுடன் முடித்தார். வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர், குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய வீரர்கள் தங்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த இந்தியா ஆட்டத்தின் 17.3-வது பந்தில் தனது வெற்றி இலக்கினை எட்டியது. அணியில் அதிகப்பட்சமாக லோகேஷ் ராகுல் 45(32) ரன்கள் குவித்தார். 

பொதுவாக ஆட்டம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் ஆட்டநாயகன் விருது ஒரு பேட்ஸ்மேனுக்கு அளிக்கப்படும், ஆனால் இந்த ஆட்டத்தில் ஆட்ட பந்துவீச்சாளர் தாக்கம் அதிகமாக இருந்ததால் ஆட்ட நாயகன் விருது இந்திய பந்துவீச்சாளர் நவ்தீப் சைனிக்கு அளிக்கப்பட்டது. குறிப்பாக அவரது வேகமான யார்கருக்காகவே அவருக்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது எனலாம்...

Trending News