அடுத்த உலகக் கோப்பை எங்கு, எப்போது, எப்படி நடக்கும்? - முழு விவரம் இதோ!

ICC World Cup 2027: ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை அடுத்து எப்போது, எங்கு நடைபெறும், தொடர் எந்த முறையில் நடத்தப்படும் என்பதை இதில் முழுமையாக காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Nov 22, 2023, 06:24 PM IST
  • 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த தொடர் நடைபெறும்.
  • போட்டியை நடத்தும் அணி நேரடியாக தகுதிபெறும்.
  • மற்ற அணிகளின் தேர்வு தரவரிசை மற்றும் தகுதிச்சுற்று மூலம் வரும்.
அடுத்த உலகக் கோப்பை எங்கு, எப்போது, எப்படி நடக்கும்? - முழு விவரம் இதோ! title=

ICC World Cup 2027: இந்திய அணி இந்த முறையும் உலகக் கோப்பை தொடரை கைப்பற்றும் வாய்ப்பை நூலிழையில் இழந்துள்ளது. நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி லீக் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வென்று, அரையிறுதியில் நியூசிலாந்து அணியையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு கெத்தாக சென்றது. ஆனால், இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் இந்தியா மிக மோசமாக தோல்வியடைந்து கோப்பையை தவறவிட்டது. ரோஹித், விராட், ஜடேஜா, ஷமி உள்ளிட்ட பலருக்கும் இதே கடைசி உலகக் கோப்பையாக இருக்க அதிக வாய்ப்புள்ளது என்பதால் கோப்பையை இழந்தது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது எனலாம். 

அடுத்தடுத்து, டி20 உலகக் கோப்பை தொடர், சாம்பியன்ஸ் டிராபி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் உள்ளிட்ட ஐசிசி தொடர்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன. 2013ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்தியா கைப்பற்றியிருந்தது. அதன்பின் ஐசிசி தொடர்களின் நாக்அவுட் வரை செல்லும் இந்திய அணி 10 ஆண்டுகளாக ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்ல முடியவில்லை. அதுதான் இந்த உலகக் கோப்பையிலும் தொடர்ந்தது. இந்த உலகக் கோப்பையின் மூலம் பலரும் 50 ஓவர் போட்டிகளை காண அதிகம் ஆர்வம் செலுத்தி வரும் நிலையில், ஒருநாள் போட்டிகளுக்கான அடுத்த ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை எப்போது என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது. 

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த உலகக் கோப்பை தொடர் அடுத்து தென்னாப்பிரிக்கா, நமீபியா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் 2027ஆம் ஆண்டு நடைபெற இருக்கிறது என்பதை ஐசிசி உறுதிப்படுத்தி உள்ளது. 1975ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் தற்போது 13ஆவது தொடர் நடந்து முடிந்துள்ளது. இதில் ஆஸ்திரேலியா தற்போதுடன் சேர்த்து மொத்தம் 6 முறை கோப்பையை வென்றுள்ளது. அதாவது 1987, 1999, 2003, 2007, 2015, 2023 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றுள்ளது. 

மேலும் படிக்க | ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் எங்கு, எப்போது பார்ப்பது...? இந்திய பிளேயிங் லெவன் இதோ!

இந்த வரிசையில் மேற்கு இந்திய தீவுகள் அணி 1975, 1979 ஆகிய ஆண்டுகளிலும், இந்தியா 1983, 2011 ஆகிய ஆண்டுகளிலும் கோப்பையை வென்றுள்ளன. அடுத்து பாகிஸ்தான் 1992ஆம் ஆண்டிலும், இலங்கை 1996ஆம் ஆண்டிலும், இங்கிலாந்து 2019ஆம் ஆண்டிலும் கோப்பையை வென்றுள்ளன. 1975இல் இருந்து விளையாடும் நியூசிலாந்து அணியும், 1992இல் இருந்து விளையாடும் தென்னாப்பிரிக்க அணியும் இதுவரை ஒருமுறை கூட உலகக் கோப்பையை வெல்லவில்லை.

எத்தனை அணிகள்?

இந்த நிலையில் அடுத்து 2027ஆம் ஆண்டு தென்னப்பிரிக்கா - நமீபியா - ஜிம்பாப்வே நாடுகளில் நடைபெறும் இந்த தொடர் எப்படி திட்டமிடப்படுகிறது என்பதை இதில் காணலாம். கடந்த இரு தொடர்களிலும் 10 அணிகள் மட்டுமே பங்கேற்ற நிலையில், அடுத்த உலகக் கோப்பையில் 14 அணிகள் பங்குபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போட்டியை நடத்தும் தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் நேரடியாக தகுதிபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், 2027 உலகக் கோப்பை தொடருக்கு சற்று முன் நிர்ணயிக்கப்படும் காலக்கெடுவின் போது, ஒருநாள் தரவரிசையில் முதல் 8 இடங்களில் இருக்கும் நேரடியாக தகுதிபெறும். அடுத்த நான்கு அணிகள் தகுதிச்சுற்றின் மூலம் தகுதிபெறும். 

தொடர் எப்படி நடத்தப்படும்?

14 அணிகளும் இரு பிரிவுகளாக அதாவது 7-7 அணிகளாக பிரிக்கப்படும். ரவுண்ட் ராபின் முறையில் ஒரு அணி தனது பிரிவில் உள்ள அனைத்து அணிகளுடனும் தலா 1 முறை மோதும். முதல் சுற்று முடிவில் இரு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகள் இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெறும். அந்த சுற்றில் ஒரு அணி தனது பிரிவில்லாத அணியுடன் மோதும். அந்த சுற்றின் இறுதியில் கடைசி இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் தொடரில் இருந்து வெளியேறும். மீதம் உள்ள நான்கு அணிகள் அரையிறுதி சுற்றில் விளையாடும்.

மேலும் படிக்க | இந்திய அணியில் வரப்போகும் எக்கச்சக்க மாற்றம்... இந்த வீரர் மட்டும் இருப்பார் - மிஷன் சாம்பியன்ஸ் டிராபி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News