இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) வரவிருக்கும் போட்டிகளுக்கான சமீபத்திய ப்ரொமோ வெளியிடப்பட்ட நிலையில், முன்னாள் இந்திய கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) கேப்டனும் ஆன எம்.எஸ். தோனி புதிய வழுக்கை அவதாரத்தை எடுத்துள்ளார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் கொண்டுவந்துள்ள ஒரு புதிய விளம்பரத்தில், தோனி ஒரு வழுக்கை தோற்றத்துடன் விளையாடுவதைக் காணலாம், இதில் தொடர்ச்சியான வெற்றியைக் கொண்டுவந்தால் பேராசையும் நல்லது தான் என்னும் பொருள் படும் வகையிலான விளம்பரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் குழந்தைகளுக்கு ஒரு பாடம் புகட்டுவதைக் காணலாம்.
#VIVOIPL salutes the new Indian spirit that is eager to innovate and rewrite the rulebook.
Will history be created yet again this IPL?
Join us in celebrating #IndiaKaApnaMantra.
LIVE from Apr 9 | Broadcast starts 6 PM, Match starts 7:30 PM | Star Sports & Disney+Hotstar VIP pic.twitter.com/6IcKGwy4np
— Star Sports (@StarSportsIndia) March 14, 2021
தோனி பாடம் புகட்டுகையில், ரோஹித் சர்மா ஐபிஎல் 2020 பட்டத்தை வைத்திருப்பது தொடர்பான காட்சி ஒரு தொகுப்பு தோன்றும். மற்றொரு விளம்பரத்தில், முன்னாள் இந்திய கேப்டன், ஒரு இராணுவ பிரிவின் தலைவராக வருகிற்றார். அதில், ஒரு "விராட் கில்லாடி" பற்றி பேசுவதைக் காணலாம், மேலும் வெற்றியைப் பெற உதவினால் கோபம் கூட எப்படி நல்லது என்பதற்கான பாடத்தை அவர் எடுக்கிறார்.
மும்பை இந்தியன்ஸ் (MI) ஐந்து முறையும், சி.எஸ்.கே, சென்னை சூப்பர் கிங்க்ஸ் மூன்று முறையும் ஐபிஎல் பட்டத்தை வென்றுள்ளது.
ஐபிஎல் 2021 (IPL 2021) ஆம் ஆண்டிற்கான போட்டிகள் நடக்கும் தேதிகளை ஐபிஎல் நிர்வாக கவுன்சில் அறிவித்துள்ளது. ஏப்ரல் 9 முதல் ஆறு இடங்களில் இந்தியாவில் நடைபெறும் என அறிவித்துள்ளது.
நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை (ஆர்.சி.பி.) எதிர்த்து சென்னையில் விளையாடுவார்கள், போட்டியின் இறுதி ஆட்டம் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மே 30 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ALSO READ | Mithali Raj 10,000 சர்வதேச ரன்கள் எடுத்த முதல் இந்திய கிரிக்கெட் வீராங்கனை
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR