விராட் கோலி எடுத்த பெரிய முடிவால் இஷான் கிஷன் படைத்த சாதனை

குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி எடுத்த பெரிய முடிவால் இஷான் கிஷன் அபார சாதனை படைத்தார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 24, 2023, 06:50 PM IST
  • விராட் கோலி எடுத்த முடிவு
  • அரைசதம் அடித்த இஷான்
  • விராட் கோலிக்கு நன்றி
விராட் கோலி எடுத்த பெரிய முடிவால் இஷான் கிஷன் படைத்த சாதனை title=

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 76 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஐந்தாம் நாள் ஆட்டம் பரபரப்பாக நடைபெறவுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற இன்னும் 289 ரன்கள் எடுக்க வேண்டும். இந்தியா வெற்றி பெற 8 விக்கெட்டுகள் தேவை. இதனை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கும் நிலையில், விராட் கோலி எடுத்த ஒரு பெரிய முடிவால் இந்திய அணியின் இளம் வீரரான இஷன் கிஷன் சாதனை படைத்துள்ளார். அதாவது அவரது பேட்டிங் ஆர்டரை இஷான் கிஷனுக்காக விட்டுக் கொடுத்தார். 

மேலும் படிக்க | சிக்ஸர் அடிக்கும் இளைஞர்களுக்கு கால்கட்டு! கவலை வேண்டாம்! இது திருமண செண்டிமெண்ட் காலம்

விராட் கோலி எடுத்த முடிவு

இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் விராட் கோலி நான்காவது இடத்தில் பேட்டிங் விளையாடுகிறார். ஆனால் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் விராட் கோலிக்கு பதிலாக இஷான் கிஷான் பேட்டிங் இறங்கினார். அதாவது, நான்காவது ஆர்டரில் இஷான் கிஷான் பேட்டிங் செய்வதைக் கண்டு அனைவரும் ஆச்சரியமடைந்தனர். இது நடந்து எப்படி? என்பதை நான்காவது நாள் ஆட்டம் முடிந்த பிறகு இஷான் கிஷன் தெரிவித்தார்.

இஷான் கிஷன் என்ன சொன்னார்?

நான்காவது நாள் ஆட்டம் முடிந்ததும், பேட்டிங் ஆர்டர் குறித்து இஷான் கிஷான் பேசும்போது, 'இது மிகவும் சிறப்பானது. என்னிடமிருந்து அணி என்ன விரும்புகிறது என்பது எனக்குத் தெரியும். எல்லோரும் என்னை ஆதரித்தார்கள். விராட் என்னை ஆதரித்து, அவரது ஆர்டரில் என்னை போய் என் விளையாட்டை விளையாடச் சொன்னார். நாளை ஆட்டத்தை முடிப்போம் என்று நம்புகிறேன். விராட் பாய் தான் முயற்சி எடுத்து நான் போக வேண்டும் என்று கூறினார்" என தெரிவித்தார். இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியாவிடமிருந்து நிறைய ஆக்ரோஷமான அணுகுமுறை இருந்தது. இதனால் அவருக்கு பதிலாக இஷானை பேட்டிங் செய்ய விராட் முடிவு செய்தார்.

இஷான் கிஷான் சிறப்பான ஆட்டம்

இஷான் கிஷன் நான்காவது இடத்தில் பேட்டிங் செய்வதை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டார். இஷான் கிஷான் 34 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் ஆட்டமிழக்காமல் 52 ரன்கள் எடுத்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 152.94 ஆக இருந்தது. இந்தியாவுக்காக டெஸ்டில் அதிவேக அரைசதம் அடித்த இரண்டாவது விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் பெற்றார். இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி வேகமாக விளையாடி 2 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்து இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 365 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

மேலும் படிக்க | ஒருநாள் உலக கோப்பையில் ரோஹித் இல்லையா? வெளியான பகீர் தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News