ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி கடந்த சில வருடங்களாக கடுமையான ஃபார்ம் அவுட்டில் இருக்கிறார். அடிக்கடி சதம் அடிக்கும் கோலி இரண்டரை வருடங்களாக சதம் அடிக்காததால் அவரது ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.
ஐபிஎல் 2022ல் கோலி ஃபார்முக்கு திரும்புவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க படுமோசமாக விளையாடினார் கோலி. ஐபிஎல் 2022 ஆரம்பித்தபோது தொடர்ச்சியாக டக் அவுட் ஆவதும், சொற்ப ரன்னிலேயே வெளியேறுவதும் என ரசிகர்களை ரொம்பவே சோதித்தார் கோலி.
ஒருகட்டத்தில் அரை சதம் அடித்த கோலியை பார்த்த ரசிகர்கள் கிங் கோலி மீண்டும் வந்துவிட்டார் என நினைத்து சந்தோஷப்பட்டனர். ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான முக்கியமான எலிமினேட்டர் போட்டியிலும் விராட் கோலி சொற்ப ரன்களிலேயே வெளியேற ரசிகர்கள் விரக்தியடைந்தனர்.
கோலி விரைவில் ஃபார்முக்கு திரும்ப வேண்டும் இல்லையெனில் டி20 உலகக்கோப்பை நிச்சயம் இந்தியாவுக்கு கடினமானதாக இருக்கும் எனவும் ரசிகர்கள் கருதுகின்றனர். இதற்கிடையே ஃபார்ம் அவுட்டில் தவிக்கும் விராட் கோலி சில காலம் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம் எனவும் முன்னாள் வீரர்கள் கூறினர்.
மேலும் படிக்க | IPL 2022 Fiinal: இறுதிப் போட்டியில் பிரதமர் மற்றும் அமித் ஷா: ரஹ்மான் நிகழ்ச்சி
இந்நிலையில் கோலியின் ஃபார்ம் அவுட் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் கூறுகையில் “இது நமக்கு தெரிந்த விராட் கோலி அல்ல. வேறு விராட் கோலிதான் இந்த சீசனில் விளையாடினார். ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் செய்த தவறுகளைவிட இந்த சீசனில் அதிகம் செய்துவிட்டார்.
ரன்கள் குவிக்காதபோது இது போன்று நிகழலாம். மோசமான பேட்டிங் நிலையை மாற்ற பல்வேறு வழிமுறைகளை பின்பற்றலாம். அது பல்வேறு விதமாக ஆட்டம் இழப்பதற்கு வழி வகுக்கும். இந்த சீசனில் அனைத்து விதமான முறையிலும் கோலி அவுட் ஆகியிருக்கிறார்” என்றார்.
மேலும் படிக்க | IPL 2022 Final: ஐபிஎல் இறுதிப்போட்டியை மழை பாதிக்குமா? வானிலை முன்னறிவிப்பு
விராட் கோலி இந்த ஐபிஎல் சீசனில் 16 போட்டிகளில் விளையாடி 341 ரன்கள் எடுத்தார். 2 முறை மட்டுமே அரை சதம் அடித்த அவரது சராசரி 22.73 என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR