U-19 WorldCup: காலிறுதியில் மோதும் இந்தியா மற்றும் வங்கதேசம்!

இன்று நடைபெறும் U-19 உலகக் கோப்பையின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன.   

Written by - RK Spark | Last Updated : Jan 29, 2022, 12:04 PM IST
  • அயர்லாந்திற்கு எதிரான இரண்டாவது லீக் போட்டிக்கு முன்னதாக கேப்டன் யாஷ் துல் உட்பட ஆறு வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்,
  • துல் இல்லாத அணியை நிஷாந்த் சிந்து (Nishant Sindhu) வழிநடத்தினார்.
U-19 WorldCup: காலிறுதியில் மோதும் இந்தியா மற்றும் வங்கதேசம்!  title=

ஆன்டிகுவாவின் ஆஸ்போர்னில் (Osbourn, Antigua) நடைபெறும் U-19 கிரிக்கெட் உலகக் கோப்பையின் (Worldcup) மூன்றாவது காலிறுதியில் நான்கு முறை சாம்பியன்களான இந்தியா வங்கதேசத்துடன் மோத உள்ளது.  கோவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்ட இந்திய அணி வீரர்கள் குணமடைந்து இந்த போட்டியில் விளையாட உள்ளனர்.  அயர்லாந்திற்கு எதிரான இரண்டாவது லீக் போட்டிக்கு முன்னதாக கேப்டன் யாஷ் துல் (Yash Dhull) உட்பட ஆறு வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர், இது இந்திய அணிக்கு மிகப் பெரும் சவாலாக இருந்தது. அவர்களில் ஐந்து பேருக்கு ஆர்டிபிசிஆர் (RTPCR) சோதனைகளில் பாஸிட்டிவ் வரவே உகாண்டாவுக்கு (Uganda) எதிரான கடைசி லீக் ஆட்டத்தை தவறவிட்டனர். 

ALSO READ | India Squad: குல்தீப் Come Back..! ஓரம்கட்டப்படும் சீனியர் வீரர்?

இந்த சூழ்நிலையிலும் அணியில் இருந்த மற்ற வீரர்களின் பலத்தால்,  இரண்டு ஆட்டங்களிலும் இந்தியா  வெற்றி பெற்று, குரூப் டாப்பர்களாக காலிறுதிக்கு தகுதி பெற்றது.  அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில்  11 வீரர்களை களமிறக்க இந்தியா போராடிய நிலையில், துல் இல்லாத அணியை நிஷாந்த் சிந்து (Nishant Sindhu) வழிநடத்தினார். 

u19

பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், “பெரும்பாலான வீரர்கள் குணமடைந்து, விளையாடுவதற்கு போதுமான உடல் தகுதியுடன் இருக்க வேண்டும். கேப்டன் துல், துணை ஷேக் ரஷீத், சித்தார்த் யாதவ், ஆராத்யா யாதவ் மற்றும் மானவ் பராக் ஆகியோருக்கு அயர்லாந்து ஆட்டத்திற்கு முன்பு  RTPCR சோதனைகளில் பாசிட்டிவ் ரிப்போர்ட் வந்தது.  துல் மற்றும் ரஷீத் இருவரும் அணிக்கு முக்கியமான வீரர்கள், தொடக்க ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக நல்ல பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.   உகாண்டாவுக்கு எதிராக மேட்ச் வின்னிங் ரன்களை அடித்த பிறகு தொடக்க ஆட்டக்காரர் ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி (Angkrish Raghuvanshi) மற்றும் ஆல்-ரவுண்டர் ராஜ் பாவாவின் (Raj Bawa) மீது நம்பிக்கை அதிகமாகி உள்ளது. 

AngkrishRaghuvanshi

இடது கை சுழற்பந்து வீச்சாளர் விக்கி ஆஸ்ட்வால் (Vicky Ostwal) ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் சிறந்த பந்துவீச்சாளராக காணப்பட்டார்.  மற்றொரு இடது கை சுழற்பந்து வீச்சாளர் சிந்து, ஓவருக்கு 2.76 ரன்கள் என்ற எகானமி ரேட்டில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி, இருந்தார். இந்த போட்டி 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை பைனல் போட்டிக்கு ஒரு பழிதீர்க்கும் விதமாக இருக்கும்" என்று கூறினார்.  அந்த போட்டியில் பங்களாதேஷ் அணி இந்திய அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த ஆசிய கோப்பை அரையிறுதியில், இந்தியா வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

அணி விவரம் 

இந்தியா: யாஷ் துல் (C), ஹர்னூர் சிங், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, சித்தார்த் யாதவ், அனீஸ்வர் கவுதம், மானவ் பராக், கவுஷல் தம்பே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், விக்கி ஓஸ்ட்வால், கர்வ் சங்வான், தினேஷ் பனா, ஆராத்யா யாதவ், ஆராத்யா யாதவ் வாசு வட்ஸ், ரவிக்குமார். 

பங்களாதேஷ்: ரகிபுல் ஹசன் (c), அப்துல்லா அல் மாமுன், அரிஃபுல் இஸ்லாம், எம்டி ஃபஹிம், மஹ்பிஜுல் இஸ்லாம், ரிப்பன் மொண்டோல், நைமூர் ரோஹ்மான், தன்சிம் ஹசன் சாகிப், பிராந்திக் நவ்ரோஸ் நபில், ஐச் மொல்லா, அஷிகுர் ஜமான், இஃப்தாகர் ஹொசைன் இப்தி, முஸ்ஃபி மெஹரோப் , தஹ்ஜிபுல் இஸ்லாம்.

ALSO READ | BBL -ல் விநோதம்..! பிளேயிங் 11-ல் விளையாடும் பயிற்சியாளர்..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News