மத்திய அரசு உழியர்களின் அடிப்படை ஊதியத்தில் 44% அதிரடி ஏற்றம்? காரணம் இதுதான்

7th Pay Commission: நீங்கள் மத்திய அரசு ஊழியரா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. இதன் விவரங்களை இங்கே காணலாம். 

7th Pay Commission: நாட்டில் உள்ள சுமார் 50 லட்சம் ஊழியர்களுக்கு பரிசு வழங்க நிதித்துறை முடிவு செய்துள்ளது. ஊழியர்களின் சம்பளத்தை ரூ.8000 உயர்த்துவதற்கான கோப்பு தயாராகிவிட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது இனி ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை ரூ.26000 ஆக உயர்த்த பரிசீலனை செய்யப்படுகின்றது. 

1 /9

மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஆனால் அதற்கு முன் அவர்களுக்கு மற்றொரு நல்ல செய்தி கிடைக்கலாம் என கூறப்படுகின்றது. அரசு சார்பில் ஊழியர்களுக்கு விரைவில் ஒரு பரிசு வழங்கப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

2 /9

நாட்டில் உள்ள சுமார் 50 லட்சம் ஊழியர்களுக்கு பரிசு வழங்க நிதித்துறை முடிவு செய்துள்ளது. ஊழியர்களின் சம்பளத்தை ரூ.8000 உயர்த்துவதற்கான கோப்பு தயாராகிவிட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது இனி ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை ரூ.26000 ஆக உயர்த்த பரிசீலனை செய்யப்படுகின்றது. இப்போது ஊழியர்களின் அடிப்படை ஊதியம் 18000 ரூபாயாக உள்ளது.

3 /9

எனினும், அடிப்படை ஊதியத்தை அதிகரிப்பது பற்றிய எந்த வித அதிகாரபூர்வ அறிவிப்பையும் இன்னும் அரசு வெளியிடவில்லை. இதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது. 

4 /9

ஊழியர்களின் ஊதிய உயர்வு ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் அடிப்படையில் நடக்கும். ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரிக்கப்பட்டு அதன் மூலம் அடிப்படை ஊதியமும் அதிகரிக்கப்படும் என கூறப்படுகின்றது. அரசு, மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்ட்ரை உயர்த்தினால், ஊழியர்களுக்கு கையில் கிடைக்கும் ஊதியத்தின் அளவும் (In Hand Salary) அதிகரிக்கும். 

5 /9

தற்போது மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 சதவிகிதமாக உள்ளது. இதன் அடிப்படையில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. இதை 3.68 சதவிகிதமாக உயர்த்த கோரிக்கை உள்ளது. 2.57 ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் அடிப்படையில் ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 ஆக உள்ளது. இது 3.68 ஆனால், குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.26,000 ஆக உயர்த்தப்படும்.

6 /9

பிட்மென்ட் ஃபாக்டர் 3.68 ஆக அதிகரித்தால், ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ. 26,000 ஆக உயரும். தற்போது ஒரு ஊழியரின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 என்றால், அலவன்ஸ்கள் தவிர்த்து, ஃபிட்மென்ட் காரணியான 2.57-ன் அடிப்படையில் அவருக்கு ரூ.46,260 (18,000 X 2.57 = 46,260) கிடைக்கும். ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3.68 ஆக அதிகரித்தால் ஊதியம் ரூ 95,680 (26000X3.68 = 95,680) ஆக உயரும். 

7 /9

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஜூலை 2024 -இல் 4% அதிகரிக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) தரவுகளின் அடிப்படையில் இது சாத்தியமாகத் தெரிகின்றது. டிஏ 4% அதிகரித்தால் மொத்த அகவிலைப்படி (Dearness Allowance) 54% ஆக உயரும்.

8 /9

இதற்கிடையில் ஊழியர்களுக்கு மற்றொரு நல்ல செய்தியும் கிடைக்க வாய்ப்புள்ளது. கொரோனா காலத்தில் முடக்கபட்ட 18 மாத டிஏ நிலுவைத் தொகை பற்றிய பேச்சும் மீண்டும் தொடங்கியுள்ளது. இது குறித்து தொழிலாளர் சங்கங்கள் சார்பில் பிரதமருக்கு கடுதம் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

9 /9

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது ஊதிய உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.