ஆசிய விளையாட்டு போட்டி 2018: பாய்மரப் படகுப்போட்டியின் 49er FX பிரிவில் இந்தியாவின் வர்ஷா கவுதம், ஸ்வேதா ஷர்வேகர் வெள்ளி வென்றனர்...!
18_வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பலேம்பங் நகரங்களில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகின்றன. இப்போட்டிகளின் 13-ஆவது நாளான இன்று பாய்மரப் படகுப்போட்டியின் 49er FX பிரிவில் இந்தியாவின் வர்ஷா கவுதம், ஸ்வேதா ஷர்வேகர் வெள்ளி வென்றுள்ளது.
ஓபன் லேசர் 4.7 கலப்பு பிரிவில், இந்தியாவின் ஹர்ஷிதா தோமர் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை பெற்றுள்ளார். மலேசியாவின் கமன் ஷாஹ் தங்கப் பதக்கத்தையும், சீனாவின் ஜிங்க்ஸியோங் வாங் வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.
Sailing: Varsha Gautham and Sweta Shervegar win silver in the 49er FX, Harshita Tomar wins bronze in the Open Laser 4.7 #AsianGames2018 pic.twitter.com/0MvuBGfwyz
— ANI (@ANI) August 31, 2018
தற்போது வரை இந்தியா 14 தங்கம், 17 வெள்ளி, 34 வெண்கலத்துடன் 59 பதக்கங்களை பெற்றுள்ளது...