IND vs WI: என்னுடன் இவர் தான் ஓப்பனிங்கில் இறங்குவார் - ஓப்பனாக சொன்ன ரோஹித் சர்மா

IND vs WI: மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் தன்னுடன் யார் மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கப்போகிறார் என ரோஹித் சர்மா அறிவித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Jul 12, 2023, 10:21 AM IST
  • இப்போட்டி இந்திய நேரப்படி இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்கும்.
  • மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள், 2 சுழற்பந்துவீச்சாளர்கள் என்ற பார்முலாவில் இந்தியா களமிறங்கும்.
  • யஷஸ்வி ஜெய்ஸ்வால் இன்றைய போட்டியில் அறிமுகமாவார் என தகவல்.
IND vs WI: என்னுடன் இவர் தான் ஓப்பனிங்கில் இறங்குவார் - ஓப்பனாக சொன்ன ரோஹித் சர்மா title=

India vs West Indies 1st Test: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் 2023-25 சுற்றில், இந்தியா தனது முதல் டெஸ்ட் போட்டியை இன்று முதல் விளையாட உள்ளது. 2021 மற்றும் 2023 ஆகிய இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் முறையே நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவிடம் மண்ணைக்கவ்வி இந்தியா தோல்வியடைந்தது. இருப்பினும், டெஸ்டில் அதன் ஆதிக்கத்தை தொடர்ந்து, கோப்பையை நோக்கிய பயணத்தில் முதல் அடியில் இந்தியா இன்று கால் வைக்கிறது. 

மிகுந்த எதிர்பார்ப்பு

மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, 5 டி20 போட்டிகளை அங்கு விளையாடுகிறது. மூன்று வடிவ போட்டிகளுக்குமான தனித்தனி ஸ்குவாட் அறிவிக்கப்பட்டது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் ரோஹித் சர்மா இந்திய அணியை தலைமை தாங்க டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

அந்த வகையில், டெஸ்ட் தொடருடன் இந்த சுற்றுப்பயணம் தொடங்க உள்ளது. டொமினிகாவில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி இன்று (ஜூலை 12) முதல் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரை இந்தியா, மேற்கு இந்திய தீவுகள் என இரு அணிகளும் மிகவும் எதிர்பார்த்திருக்கின்றன. 

மேலும் படிக்க | IND vs WI: முதல் டெஸ்ட் போட்டி! மும்பை வீரருக்கு வாய்ப்பு! சிஎஸ்கே வீரருக்கு நோ!

இந்தியாவின் பிளேயிங் லெவன், ஆட்ட அணுகுமுறை குறித்து பல்வேறு கணிப்புகள் கூறப்பட்டு வருகின்றன. ஓப்பனிங்கில் யார் களமிறங்குவார்கள், புஜாரா இல்லாத மூன்றாவது இடத்திற்கு யார் மாற்று, எத்தனை சுழற்பந்துவீச்சாளர்கள், விக்கெட் கீப்பர் பேட்டராக யாரை பிளேயிங் லெவனில் எடுப்பது போன்ற பல்வேறு கேள்விகளும் அடுத்து எழுப்பப்படுகிறது. 

சுப்மான் கில் சொன்னது என்ன?

அந்த வகையில், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் இந்திய அணி குறித்த பல்வேறு கேள்விகளுக்கு நேரடியாகவே பதிலளித்தார். அதில்,"ஆடுகளத்தை பார்க்கும்போது (டொமினிகாவில்), நாங்கள் இரண்டு ஸ்பின்னர்கள் மற்றும் மூன்று வேகப்பந்துவீச்சாளர்களுடன் விளையாடுவோம் என்று நம்புகிறேன். பேட்டிங் நிலைகளைப் பொறுத்தவரை, சுப்மான் கில் நம்பர் 3 இடத்தில் விளையாடுவார். அவர் நம்பர் 3-ல் விளையாட விரும்புகிறார், அதை அவர் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் கூறினார். அவர் தனது பெரும்பாலும் நம்பர் 3 மற்றும் 4 இல் விளையாடியுள்ளார். 

இந்திய கிரிக்கெட்டுக்கு இது உற்சாகமான நேரமாக இருக்கும். நாங்கள் அதற்கேற்ப வீரர்களை கண்டுபிடித்துள்ளோம், நீண்ட காலத்திற்கு அவர் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன். நீண்ட காலமாக இடது கை தொடக்க ஆட்டக்காரராக இருக்க வேண்டும் என்று நாங்கள் ஆசைப்பட்டோம்" என தன சக ஓப்பனரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவிக்கிறார்.   

பேட்டிங் ஒருபுறம் இருக்க, இந்திய அணியின் இளம் வேகப்பந்துவீச்சு படை சிராஜ், உனத்கட் தலைமையில் விளையாடும் என எதிர்பார்ககப்படுகிறது. சுழற்பந்துவீச்சில் அஸ்வின் - ஜடேஜா ஜோடி இடம்பெறும். மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக முகேஷ் குமார் அல்லது ஷர்துல் தாக்கூர் இடம்பெறலாம் என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | ரோஹித் ஷர்மா மீது விமர்சனம்! கவலைப்படாத தம்பி, நான் இருக்கேன்! ஆதரவுக் கரம் நீட்டும் ஹர்பஜன்
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News