IND vs SL : 'இனி இவர்கள் சும்மாதான் இருக்கணும்' ஓரங்கட்டப்படும் முக்கிய வீரர்கள் - என்ன காரணம்?

IND vs SL ODI Series : இந்தியா இலங்கை உடனான ஒருநாள் தொடர் ஜன. 10ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சீனியர்களின் வருகையால் பல முக்கிய வீரர்களுக்கு அணியில் இடமில்லை என தெரிவிக்கப்படுகிறது. 

Written by - Sudharsan G | Last Updated : Jan 8, 2023, 03:17 PM IST
  • ஜன. 10ஆம் தேதி இந்தியா - இலங்கை ஒருநாள் தொடர் தொடங்குகிறது.
  • விராட் கோலி, ரோஹித், கேஎல் ராகுல், பும்ரா, ஷமி ஆகியோர் அணிக்கு திரும்புகின்றனர்.
IND vs SL : 'இனி இவர்கள் சும்மாதான் இருக்கணும்' ஓரங்கட்டப்படும் முக்கிய வீரர்கள் - என்ன காரணம்? title=

IND vs SL ODI Series : டி20, ஒருநாள் தொடர்களை விளையாட இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், அதை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. தொடர் நாயகனாக அக்சர் படேல் தேர்வானார். 

இதையடுத்து, இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நாளை மறுதினம் (ஜன. 10) தொடங்க உள்ளது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணிக்கு ரோஹித் சர்மா தலைமையேற்க உள்ளார். தொடர்ந்து, சீனியர் வீரரான விராட் கோலி, கேஎல் ராகுல், காயத்தில் இருந்து மீண்டுள்ள பும்ரா, ஷமி ஆகியோர் மீண்டும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளனர். ரோஹித், விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோருக்கு டி20 அணயில் ஏற்கெனவே வாய்ப்பளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

அந்த வகையில், சில வீரர்கள் இலங்கை அணியுடனான ஒருநாள் தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடுவது கடினம் என்றே கூறப்படுகிறது. குறிப்பாக, கேஎல் ராகுல், குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக் ஆகியோர் விளையாட வாய்ப்பே இல்லை என்றும் கருத்து தெரிவிக்கப்படுகிறது. அதுகுறித்து இங்கு காண்போம். 

மேலும் படிக்க | சூர்யகுமாருக்காக பிசிசிஐக்கு தலைவலியை உண்டாக்கிய காம்பீர்..!

கே.எல். ராகுல்

இளம் வீரர் இஷான் கிஷன் களமிறங்கினால், கே.எல்.ராகுலுக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை. மேலும், சூர்யகுமார் யாதவ் வேறு உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கிறார். எனவே, ராகுல் தொடக்க ஆட்டக்காரராகவும் இறங்க முடியாது, மிடில் ஆர்டரில் விளையாட முடியாது. அதனால், இந்த தொடரில் அவர் விளையாட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. 

குல்தீப் யாதவ்

யுஸ்வேந்திர சாஹல் விளையாடுவதற்கே அதிக வாயப்பு இருப்பதால், குல்தீப் யாதவ் ஒரு ஆட்டத்தில் விளையாடுவதற்கு கூட சாத்தியமில்லை. இது துரதிர்ஷ்டவசமானது என்றாலும், இந்தாண்டு இறுதியில் வரும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராக வேண்டும் என்பதால், இதுபோன்ற முடிவுகள் மேற்கொள்ளப்படுவது அவசியமானதுதான். குல்தீப் யாதவால் விக்கெட்டுகளை எடுக்க முடியும், ஆனால் சில சமயங்களில் அதிக ரன்களை கொடுத்து விடுகிறார். இதுவே, ஒரு குறையாக உள்ளது. 

உம்ரான் மாலிக்

ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோர் அணிக்கு திரும்பியதால், உம்ரான் மாலிக்கும் இத்தொடரில் விளையாட வாய்ப்பில்லை. அவருக்கு போட்டியாளராக அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ் ஆகியோரும் உள்ளனர். திறமையான உம்ரான் கானை வெளியே அமரவைப்பது சற்று துரதிருஷ்டம்தான். 

இலங்கைக்கு எதிரான இந்திய ஒருநாள் அணி 

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயஸ் ஐயர், கே.எல். ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது. ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.

மேலும் படிக்க | சூர்யகுமார் யாதவ் ஏன் இத்தனை சாதனைகளை முறியடிக்கிறார் என்று தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News