IND vs ENG: புஜாரா அவுட்டை கொண்டாடிய இந்திய வீரர்கள்

பயிற்சி ஆட்டத்தின்போது புஜாரா அவுட்டானதை இந்திய வீரர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.    

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 25, 2022, 07:55 AM IST
  • இந்திய அணியின் பயிற்சி ஆட்டம்
  • ஷமி பந்துவீச்சில் அவுட்டான புஜாரா
  • கொண்டாடிய இந்திய வீரர்கள் வீடியோ
IND vs ENG: புஜாரா அவுட்டை கொண்டாடிய இந்திய வீரர்கள்  title=

இங்கிலாந்து சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய அணி பயிற்சிப் போட்டியில் பங்கேற்றுள்ளது. அந்தப் போட்டியில் கவுண்டி அணிக்காக விளையாடிய புஜாராவை முகமது ஷமி அவுட்டாகியதும் இந்திய வீரர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். அதேநேரத்தில் அவருடைய அவுட், இந்திய அணிக்கு கவலையாகவும் அமைந்துள்ளது.  

இந்திய அணியின் பயிற்சி போட்டி 

மோசமான ஃபார்ம் காரணமாக கழற்றிவிடப்பட்ட புஜாரா, இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மூலம் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். இங்கிலாந்து சென்றுள்ள அணியில் இடம்பிடித்துள்ள அவர், லீசெஸ்டர்ஷைர் அணிக்காக களமிறங்கியுள்ளார். அந்த அணியில் ரிஷப் பண்ட் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரும் விளையாடுகின்றனர். இதில் லீசெஸ்டர்ஷைர் அணிக்காக களமிறங்கியுள்ள புஜாரா, எதிர்பார்த்த அளவுக்கு இப்போட்டியில் விளையாடவில்லை.  

மேலும் படிக்க | யார் இந்த சர்ஃபராஸ் கான்? விரைவில் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகம்!

மோசமான ஃபார்ம் புஜாரா

பயிற்சி ஆட்டத்தின் இரண்டாவது நாளில் சேட்டேஷ்வர் புஜாராவுக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அவர் களமிறங்கியதும் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முகமது ஷமி துல்லியமாக பந்துவீசி புஜாராவுக்கு நெருக்கடி கொடுத்தார். 6 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர், திடீரென ஷமி பந்துவீச்சில் இன்சைடு எட்ஜாகி போல்ட் என்ற முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார். அவரின் விக்கெட்டை வீழ்த்தியதும் இந்திய வீரர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். ஷமி நேராக ஓடிச் சென்று புஜாரா தோள்மீது ஏறி கலாய்த்தார். 

கவுண்டி சாம்பியன்ஷிப்பில் ரன் மழை 

இதனால் சோகத்துடன் போட்டியில் இருந்து வெளியேறினார் புஜாரா. முன்னதாக, மோசமான பார்மில் இருந்து மீள்வதற்காக இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அவர், ரன் மழை பொழிந்தார். சசெக்ஸ் அணிக்காக விளையாடிய புஜாரா, இந்த சீசனில் விளையாடிய 5 போட்டிகளில் 8 இன்னிங்ஸ்களில் 120 சராசரியில் 720 ரன்கள்  குவித்தார். இதில் இரண்டு இரட்டை சதங்களும் அடங்கும். இந்த ஃபார்மை இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் தொடர வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 

மேலும் படிக்க | TNPL: மன்கட் முறையில் அவுட் செய்த பாபா அப்ராஜித் - கடுப்பான சேப்பாக் வீரர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News