ஐபிஎல்லில் நேற்று நடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்களை எடுத்தது.
அடுத்ததாக களமிறங்கிய கொல்கத்தா அணி இலக்கை 19.1 ஓவர்களில் எட்டி வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி தரப்பில் விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டதும், ராணாவின் பொறுப்பான ஆட்டமும் வெற்றிக்கு காரணமாக அமைந்தன.
இந்நிலையில் ராஜஸ்தான் அணி தோல்வியடைந்தது தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறுகையில், “ஃபினிஷர் என்றால் 14ஆவது ஓவர் அல்லது 15வது ஓவரில் களமிறங்குவது என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது அப்படி அல்ல. அவரது ஆட்ட திறனைப் பார்த்து அவரை சில ஓவர்களுக்கு முன்னதாகவேக்கூட களமிறங்க வைக்கலாம்.
மேலும் படிக்க | பௌலிங்கில் சொதப்பிய ராஜஸ்தான்... வென்றது கொல்கத்தா
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரரான சிம்ரன் ஹெட்மயரை தாமதமாக களமிறங்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முடிவில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. அந்த அணியின் தோல்விக்கு அதுதான் காரணம்” என்றார்.
மேலும் படிக்க | தோனி மாதிரி சேவாக், கம்பீரை ஆதரிக்காதது ஏன்? - யுவராஜ் சிங் ஆதங்கம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR