இந்திய அணிக்கு, கம்பேக் கொடுத்துத் திரும்பியுள்ள தினேஷ் கார்த்திக் தொடர்ச்சியாகத் தனது கலக்கலான ஆட்டத்தை வழங்கிவருகிறார்.
இந்திய அணியில் பலகாலம் ஓரங்கப்பட்டிருந்த அவர், தற்போது அணித் தேர்வில் தவிர்க்கப்பட முடியாத ஒரு சக்தியாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளார். புதிய தலைமுறையைச் சேர்ந்த ஏராளமான கிரிக்கெட் பார்வையாளர்களையும் தன் பக்கம் இழுத்துள்ள கார்த்திக், தனது அதிரடி மற்றும் நேர்த்தியான ஆட்டத்தால் பார்வையாளர்களை என்டெர்டெயின் செய்துவருகிறார்.
அவரோடு கிரிக்கெட் கரியரைத் தொடங்கிய பல வீரர்கள் இருக்கும் இடம் தெரியாமல் உள்ள நிலையில் தினேஷ் கார்த்திக் மட்டும் கம்பேக் கொடுத்துக் கலக்கிவருவது கிரிக்கெட்டைத் தாண்டிய உத்வேகத்தைப் பலருக்கும் வழங்கிவருகிறது.
இந்நிலையில், தினேஷ் கார்த்திக் பற்றி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் சில விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். அதில், தினேஷ் கார்த்திக் நன்றாக விளையாடிவருவதாகவும் ஆனால் அவர் ‘ஃபினிஷர்’ அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
20 ஓவர் போட்டிகளைப் பொறுத்தவரை கடைசி 4 ஓவர்களில் இறங்கி ரன் சேர்ப்போரையெல்லாம் ‘ஃபினிஷர்’ என ஏற்றுக்கொள்ளமுடியாது எனத் தெரிவித்துள்ள அவர் குறைந்தபட்சம் 8அல்லது 9 ஆவது ஓவர் முதல் களத்தில் இருந்து 60 ரன்களாவது அடித்து கடைசி வரை வெற்றிக்கு அழைத்துச் செல்லக்கூடியவர்களே ‘ஃபினிஷர்’ எனவும் தெரிவித்துள்ளார்.
தினேஷ் கார்த்திக் தற்போது செய்துகொண்டிருப்பதை ‘ஃபைனல் டச்’ என்று வேண்டுமானால் அழைக்கலாம் எனத் தெரிவித்துள்ள அவர் ஃபினிஷர் ஆவதற்காக தினேஷ் கார்த்திக் தன்னை மெருகேற்றிவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | கிரிக்கெட் உலகில் சர்ச்சையை ஏற்படுத்திய பேட்டுகள்- லிஸ்ட்டுல இத்தனை பேட் இருக்கா?
ஸ்ரீகாந்த், தினேஷ் கார்த்திக் பற்றி இந்தக் கருத்தைத் தெரிவித்திருந்தாலும் தற்போது பலரது பார்வையும் தோனியின் பக்கம் சென்றுள்ளது. ஐபிஎல் உள்ளிட்ட இருபது ஓவர் போட்டிகளில் பெரும்பாலும் கடைசி நேர ஓவர்களில்தான் தோனி களமிறங்கி இருக்கிறார். எனில், தோனி ஃபினிசர் இல்லையா? அவரை ஃபினிஷர் என அவரது ரசிகர்கள் பல காலமாக சொல்லிவருவது உண்மையில்லையா எனவும் நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ