மழையின் கருணையால் 1 புள்ளி பெற்றது தென்னாப்பிரிக்கா அணி!

தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையே நடைப்பெற்ற போட்டி மழையில் காரணமாக கைவிடப்பட்டதை அடுத்து இரு அணிகளும் தலா ஒரு புள்ளிகளை பகிர்ந்துக்கொண்டது!

Last Updated : Jun 11, 2019, 08:05 AM IST
மழையின் கருணையால் 1 புள்ளி பெற்றது தென்னாப்பிரிக்கா அணி! title=

தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையே நடைப்பெற்ற போட்டி மழையில் காரணமாக கைவிடப்பட்டதை அடுத்து இரு அணிகளும் தலா ஒரு புள்ளிகளை பகிர்ந்துக்கொண்டது!

ICC கிரிக்கெட் உலக கோப்பை 2019 இங்கிலாந்து நாட்டில் நடைப்பெற்று வருகிறது. இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை என ஆசிய நாடுகள் உள்பட 10 அணிகள் இத்தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இந்நிலையில் நேற்று ரோஸ் பௌள் மைதானத்தில் தென்னாப்பிரிக்கா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே 15-வது லீக் போட்டி நடைப்பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது. இதனையடுத்து பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை பறிக்கொடுத்து 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டத்தின் 7-வது ஓவரில் மழை குறுக்கிட்டது.

பின்னர் மழையின் குறுக்கீடு காரணமாக போட்டி கைவிடப்படுவதாக அறிவித்தது. போட்டி முடிவின்றி அமைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு புள்ளிகளை பகிர்ந்துக்கொண்டது. 

முன்னதாக தான் விளையாடி 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவிய தென்னாப்பிரிக்கா அணி இப்போட்டியில் வெற்றி பெறுமா? என ரசிகர்கள் ஆவலாக காத்திருந்த நிலையில் மழையின் குறுக்கீடு அனைவரது எதிர்பார்ப்பையும் பொய்யாக்கியது.

தற்போதைய நிலவரப்படி புள்ளிப்பட்டியலில் 1 புள்ளியுடன் தென்னாப்பிரிகா 9-வது இடத்தில் உள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி 3 புள்ளிகளுடன் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Trending News