வெஸ்ட் இண்டீஸூக்கு எதிராக ரோகிச் சர்மாவுடன் ஓப்பனிங் சுப்மான் கில் இல்லை - டிராவிட் பிளான்

IND vs WI: இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையே ஜூலை 12  முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மாவுடன், ஷுப்மான் கில்லுக்குப் பதிலாக மற்றொரு வீரர் இன்னிங்ஸைத் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 8, 2023, 01:04 PM IST
  • யஷஸ்வி ஜெய்ஷ்வாலுக்கு வாய்ப்பு
  • ஓப்பனிங் சுப்மான் கில் இல்லை
  • பயிற்சியாளர் டிராடவிட் பிளான்
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிராக ரோகிச் சர்மாவுடன் ஓப்பனிங் சுப்மான் கில் இல்லை - டிராவிட் பிளான் title=

இந்திய அணி ஜூலை 12 முதல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் ஓப்பனிங் யார் இறங்குவார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் ஒரு திட்டம் இருப்பதாகவும், அதனை இந்த டெஸ்ட் போட்டியில் செயல்படுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சுப்மான் கில் இல்லை

ரோஹித் சர்மாவுடன், ஷுப்மான் கில் கடந்த பல போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். ஆனால், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பெரிய மாற்றத்தைக் காணலாம். முதல் டெஸ்ட் தொடங்க இன்னும் ஐந்து நாட்கள் உள்ளன. யஷஸ்வி ஜெய்ஸ்வால் சுப்மான் கில்லுக்கு பதிலாக ஓப்பனிங் இறங்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | Happy Birthday Dhoni: தோனியின் இந்த ஒரு சாதனையை யாராலும் தொட கூட முடியாது!

டிராவிட்டின் முடிவு

இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் ஷர்மாவுடன் ஷுப்மான் கில் ஓபன் செய்ய மாட்டார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்தப் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் சேட்டேஷ்வர் புஜாராவுக்கு மாற்றாக ஷுப்மான் கில்லை விளையாட வைக்க விரும்புகின்றனர். அதன்படி, இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான தொடரின் தொடக்க டெஸ்டில், ஷுப்மான் கில் அநேகமாக மூன்றாம் இடத்தில் பேட் செய்வார். ஜெய்ஸ்வால் ரோஹித்துடன் ஓபன் செய்வார்.

ஜெய்ஸ்வால் ஓப்பனிங் ஏன்

டெஸ்ட் போட்டிக்கு முந்தைய 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 76 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். பெரும்பாலான டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் 50 பந்துகளை எதிர்கொண்டு திரும்பினர். இதன் போது, ​​டிராவிட் மற்றும் ரோஹித் ஆகியோர் வெவ்வேறு சிக்னல்களை அளித்து வரும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு பிளேயிங் லெவனில் விளையாட வாய்ப்பு கொடுப்பது குறித்து பரிசீலித்துள்ளனர். மூன்றாம் இடத்தில் உள்ள சேதேஷ்வர் புஜாராவுக்குப் பதிலாக சுப்மான் கில் இறக்கவும் முடிவெடுத்திருக்கின்றனர்.

ஷூப்மான் கில் நம்பிக்கை

ஷுப்மான் கில் எல்லா இடத்திலும் பேட்டிங் செய்யக்கூடிய ஒருவராக இருக்கிறார். அவரால் ஓப்பன் செய்ய முடியும். அவர் நம்பர் 3 முதல் நம்பர் 5 வரை பேட்டிங் செய்யும் திறமையும் அவரிடம் இருக்கிறது. மிடில் ஆர்டரில் சேட்டேஷ்வர் புஜாரா அல்லது அஜிங்க்யா ரஹானே ஆகியோர் இந்த ஆண்டுக்கு பிறகு விளையாடமாட்டார்கள் என்பதால் அவர்களின் இடத்தை நிரப்பக்கூடியவராக சுப்மான் கில் பார்க்கப்படுகிறார். இது சுப்மான் கில்லுக்கு இந்திய அணி கொடுத்திருக்கும் கூடுதல் பொறுப்பாகவும் பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | அவர் அமைதியானவர் இல்லை! தோனியின் மறுபக்கத்தை அம்பலப்படுத்திய முன்னாள் வீரர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News