தடுமாறிய இந்திய அணியை காப்பாற்றிய ஸ்ரேயஸ், ரிஷப் பன்ட்...

இந்தியா - மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் குவித்துள்ளது.

Last Updated : Dec 15, 2019, 06:12 PM IST
தடுமாறிய இந்திய அணியை காப்பாற்றிய ஸ்ரேயஸ், ரிஷப் பன்ட்... title=

இந்தியா - மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைப்பெற்ற டி20 தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இதனையடுத்து ஒருநாள் போட்டி இன்று சென்னை போட்டியில் இருந்து துவங்குகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்து விளையாடியது. இந்தியா தரப்பில் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 36(56), லோகேஷ் ராகுல் 6(15) ரன்களில் வெளியேற, இவர்களை தொடர்ந்து வந்த விராட் கோலி 4(4) ரன்களில் வெளியேறி ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயஸ் ஐயர் 70(88), ரிஷப் பன்ட் 71(69) ஜோடி நின்று விளையாடி அணிக்கு பலம் சேர்த்தனர். எனினும் இவர்களை தொடர்ந்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேற இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் மட்டுமே குவித்தது. 

மேற்கிந்திய தரப்பில் செல்டன் கார்ட்டல், கீமோ பவுள் மற்றும் அல்ஜாரியா ஜோசப் தலா 2 விக்கெட்கள் குவித்தனர். இதனையடுத்து 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கவுள்ளது.

முன்னதாக ஆட்டத்தில் 23-வது ஓவரில் மைதானத்திற்குள் நாய் குட்டி ஒன்று நுழைந்த நிலையல் ஆட்டம் சிறுது நேரம் தடைப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Trending News