வெற்றியை நழுவ விட்ட லக்னோ... அஸ்வின் எடுத்த அந்த விக்கெட் - RR வெற்றிக்கு இதுதான் காரணம்!

RR vs LSG Match Highlights: ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. 

Written by - Sudharsan G | Last Updated : Mar 24, 2024, 08:10 PM IST
  • ராஜஸ்தானில் சஞ்சு சாம்சன் 82 ரன்களை குவித்தார்.
  • லக்னோ அணியில் ராகுல், பூரன் அரைசதம் அடித்தனர்.
  • சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
வெற்றியை நழுவ விட்ட லக்னோ... அஸ்வின் எடுத்த அந்த விக்கெட் - RR வெற்றிக்கு இதுதான் காரணம்! title=

RR vs LSG Match Highlights: இந்தியன் பிரீமீயர் லீக் தொடர் (IPL 2024) நான்காவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை சந்தித்தது. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிறப்பாக பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 193 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 82, ரியான் பராக் 43, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 24 ரன்களை சேர்த்தனர். லக்னோ பந்துவீச்சில் நவீன் உல் - ஹக் 2 விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய் 1 விக்கெட்டையும், மொஷின் கான் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். 

ராகுல் - பூரன் ஜோடி

194 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு ஆரம்பத்திலேயே விக்கெட்டுகள் சரிந்தன. டி காக், தேவதத் படிக்கல், ஆயுஷ் பதோனி ஆகியோர் தங்களின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து தவறவிட்டனர். இது லக்னோ அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. கேஎல் ராகுல் நிதானமாக விளையாடி ஒரு பக்கம் நிலையாய் நிற்க மறுபக்கம், விக்கெட்டுகள் சரிந்தன. அடுத்து வந்த தீபக் ஹூடாவும் ராகுலைப் போல் நிதானம் காட்டினார். இருப்பினும் அவரும் சற்று நேரமே தாக்குபிடித்தாலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆறாவது பேட்டராக களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடவே லக்னோ அணியின் ரன்ரேட் ஏறத்தொடங்கியது.

மேலும் படிக்க | மும்பை இந்தியன்ஸ் தவறவிட்ட தங்கம்... சிக்ஸர் மழையால் திணறிய மைதானம் - யார் இவர்?

நான்ட்ரே பர்கர், போல்ட், அஸ்வின், சஹால், ஆவேஷ் என அனைத்து பந்துவீச்சாளர்களையும் பூரன் சமாளித்த டெத் ஓவர்களில் சற்றே சுணக்கம் காட்டினார். கடைசி நான்கு ஓவர்களுக்கு 49 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 17ஆவது ஓவரை சந்தீப் சர்மா வீசினார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே கேஎல் ராகுல் ஆட்டமிழந்தார். ராகுல் 44 பந்துகளுக்கு 58 ரன்களை சேர்த்தார். அந்த ஓவரில் மொத்தம் 7 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது.

அஸ்வின் வீசிய அந்த ஓவர்

18ஆவது ஓவரை அஸ்வின் வீச வந்தார். ஸ்டோய்னிஸ் மற்றும் பூரன் களத்தில் இருந்த நிலையில், அஸ்வின் சிறப்பாக வீசி ஸ்டாய்னிஸ் விக்கெட்டை கைப்பற்றினார். அந்த ஓவரில் 4 ரன்களை மட்டுமே அஸ்வின் கொடுத்தார். முக்கிய விக்கெட்டையும் எடுத்தார். இதுவே ராஜஸ்தான் வெற்றியை உறுதிப்படுத்தியது. 

சந்தீப் வீசிய 19ஆவது ஓவரில் 19 ரன்கள், 20 ஓவரில் 6 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போல்ட் 2 விக்கெட்டுகளையும், சந்தீப் சர்மா, சஹால் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகன் விருதை பெற்றார். 

மேலும் படிக்க | மும்பை இந்தியன்ஸ் அணியில் இம்பாக்ட் பிளேயர் ரோகித் சர்மா? ரசிகர்கள் கொந்தளிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News