வெறும் 90 ரன்களில் சதத்தை தவறவிட்ட ரிஷப் பன்ட்! இணையவாசிகளின் பாய்ச்சல்

பார்ம் இல்லாமல் தவித்து வரும் ரிஷப் பன்டை கடுமையாக விளாசி வருகின்றனர் நெட்டிசன்கள்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 30, 2022, 04:30 PM IST
  • தொடரும் ரிஷப் பன்டின் மோசமான பார்ம்
  • இந்திய அணி மீது கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சனம்
  • சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்காதது ஏன்?
வெறும் 90 ரன்களில் சதத்தை தவறவிட்ட ரிஷப் பன்ட்! இணையவாசிகளின் பாய்ச்சல் title=

ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் தொடர்ந்து மோசமாக விளையாடி வரும் ரிஷப் பன்ட், நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி போட்டியிலும் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரின் இத்தகைய ஆட்டத்துக்கு இணையவாசிகள் பொங்கி எழுந்துள்ளனர். சிறப்பாக விளையாடும் சஞ்சு சாம்சனை வெளியே உட்கார வைத்துவிட்டு, ரிஷப் பன்டுக்கு பிசிசிஐ தொடர்ந்து வாய்ப்பளிப்பது ஏன்? என்றும் வினவியுள்ளனர்.

நியூசிலாந்து தொடர்

உலக கோப்பை படுதோல்விக்குப் பிறகு வெறும் கையுடன் நியூசிலாந்து சென்ற இந்திய அணி, 20 ஓவர் தொடரை வென்றது. அடுத்தாக ஒருநாள் போட்டியில் களமிறங்கிய இந்திய அணி, 1-0 என்ற கணக்கில் தொடரை இழந்து வெறும் கையுடன் தாயகம் திரும்புகிறது. கடைசி ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோற்க வேண்டியது. வருண பகவானில் ஆசியால் தப்பித்துவிட்டது. இந்த தொடர் முழுவதும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பன்ட், நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி போட்டியிலும் அதனை தொடர்ந்தார்.

ரிஷப் பன்ட் மீது விமர்சனம்

நல்ல பார்மில் இருக்கும் சஞ்சு சாம்சனை வெளியே உட்கார வைத்துவிட்டு, இடது கை பேட்ஸ்மேன் அணிக்கு தேவை என்கிற ஒரே காரணத்திற்காக பார்ம் இல்லாமல் இருக்கும் ரிஷப் பன்டுக்கு இந்திய அணியில் மீண்டும் மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. கடைசி போட்டியிலாவது கிடைத்த வாய்ப்புக்காவது சிறப்பாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 10 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் இணையவாசிகள் பொங்கி எழுந்துவிட்டனர்.

மேலும் படிக்க | அழகி உடன் கணவரின் நெருக்கமான படங்கள் - சானியா மிர்சா விவாகரத்துக்கு இதுதான் காரணமா?

வெறும் 90 ரன்களில் சதம் மிஸ்

பார்ம் இல்லாமல் இருந்த விராட் கோலியை விளாசியதுபோலவே இப்போது ரிஷப் பன்டை வறுத்தெடுத்து வருகின்றனர் நெட்டிசன்கள். நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் அவர் 10 ரன்களில் ஆட்டமிழந்த பிறகு, லெஜண்ட் ரிஷப் பன்ட் வெறும் 90 ரன்களில் சத்ததை மிஸ் செய்துவிட்டார். அவருடைய ஆட்டத்தை நாம் பாராட்டியே ஆக வேண்டும் என்று வஞ்சப் புகழ்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள் ரிஷப் பன்டை கிண்டலடித்துள்ளனர். மேலும், வங்கதேசம் தொடரிலும் அவருக்கு வாய்ப்பளித்த பிசிசிஐ முடிவை வெடி வெடித்து கொண்டாடியே ஆக வேண்டும் என்றும் டிவிட்டரில் கமெண்ட் அடித்துள்ளனர் இணையவாசிகள். 

மேலும் படிக்க | உலகக்கோப்பையில் சிறப்பாக ஆடினால் என்ன? முடிவுக்கு வரும் முக்கிய வீரரின் பயணம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News