இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் தனது சுட்டி தனத்தின் மூலம் பலரையும் ஈர்த்து வருகிறார். 24 வயதே ஆன பந்த் இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத வீரராக தற்பொழுது உள்ளார். உலகின் மிகசிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தோனியின் ஓய்விற்கு பிறகு அந்த இடத்தை யார் நிரப்ப போகிறார்கள் என்ற கேள்வி அனைவரது மனதிலும் இருந்தது.
ALSO READ டி20 2021 உலக கோப்பையில் DRS பயன்படுத்தப்படுமா?
தனது அதிரடி ஆட்டம் மற்றும் சிறப்பான கீப்பிங் மூலம் அந்த இடத்தை நிரப்பி வருகிறார் ரிஷப் பந்த். ஆரம்ப காலத்தில் சொதப்பி வந்த பந்த் பின் தனக்கு அளிக்கபட்ட வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி வருகிறார். ஐபிஎல்ல் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வரும் பந்த் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரின் இன்ஜுரிக்கு பிறகு இந்த வருடம் டெல்லி அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். சிறப்பாக அணியை வழிநடத்தி சென்ற பந்த் டெல்லி அணியை பிளே ஆப் வரையிலும் கொண்டு சென்றார்.
நேற்று நடைபெற்ற குவாலியைர் 2 போட்டியில் டெல்லி அணி கொல்கத்தா அணியிடம் தோல்வி அடைந்து பைனல் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் அம்பயரிடன் பந்த் செய்த குறும்பு தனம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அம்பயரை வலது பக்கம் கூப்பிட்டு விட்டு இடது பக்கம் வந்து நின்ற பந்த், தன்னை யார் கூப்பிட்டார்கள் என்று அம்பயர் தேடுகிறார். இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
கடந்த வருடம் டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பேட்டி அளித்த பொழுது பின் பக்கம் நின்று அவரை கேலி செய்ததும் அப்போது வைரல் ஆனது.
One day I'll get to do an interview in peace @DelhiCapitals @RishabhPant17 @MStoinis pic.twitter.com/s0Dw3J3MNf
— Ricky Ponting AO (@RickyPonting) October 18, 2020
ALSO READ எளிதான போட்டியை கஷ்டப்பட்டு வென்று பைனலுக்கு சென்றது கொல்கத்தா!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR