Rinku Singh: கேப்டனாக அறிவிக்கப்பட்டார் கேகேஆர் அணி வீரர் ரிங்கு சிங்!

இந்திய டி20 அணியில் இடம் பிடித்துள்ள ரிங்கு சிங், இன்னு ஒருநாள் போட்டிகளில் இடம் பெறவில்லை. சாம்பியன்ஸ் டிராபி 2025 நெருங்கி வரும் நிலையில் அவர் இடம் பெறுவாரா என்பது சந்தேகமே.

Written by - RK Spark | Last Updated : Dec 22, 2024, 03:52 PM IST
  • கேப்டனாக எனக்கு பெரிய பங்கு உள்ளது.
  • இதற்கு நான் தயாராக இருக்கிறேன்.
  • இந்திய அணி வீரர் ரின்கு சிங் பதில்.
Rinku Singh: கேப்டனாக அறிவிக்கப்பட்டார் கேகேஆர் அணி வீரர் ரிங்கு சிங்! title=

இந்தியாவில் தற்போது உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே டிராபி தொடங்கி உள்ளது. இதில் உத்தரபிரதேச அணியின் கேப்டனாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் இந்திய அணியின் வீரர் ரிங்கு சிங் நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த சையத் முஷ்டாக் அலி டிராபியில் உத்தரபிரதேச அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் இடம் பெற்று இருந்தார். இந்நிலையில் விஜய் ஹசாரே டிராபியில் ரின்கு சிங் முதன் முறையாக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரின்கு சிங் இதற்கு முன்பு பெரிதாக கேப்டன்சி பொறுப்பை ஏற்றது இல்லை. விஜய் ஹசாரே டிராபியில் தான் முதல் முறையாக ஒரு மாநில அணிக்கு கேப்டனாக செயல்பட உள்ளார் ரிங்கு சிங்.

மேலும் படிக்க | அஷ்வின் ஓய்வு பெற்றதால் பிசிசிஐ எவ்வளவு ஓய்வூதியம் கொடுக்கும் தெரியுமா?

உத்தரபிரதேச T20 லீக்கில் மீரட் மேவரிக்ஸ் அணியின் கேப்டனாக இருந்தது நல்ல அனுபவமாக இருந்தது என்றும், அது எனக்கு கைகொடுக்கும் என்றும் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார். மேலும் தனது பந்துவீச்சை மேம்படுத்துவதில் கடுமையாக உழைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். "உத்தரபிரதேச T20 லீக்கில் மீரட் மேவரிக்ஸ் அணியை வழிநடத்த எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அங்கு என்னால் முடிந்த அனைத்தையும் அணிக்காக செய்தேன். என்னால் சிறப்பாக விளையாட முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். கேப்டன் பொறுப்பை நான் மிகவும் ரசித்தேன், இதன் மூலம் பல விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடிந்தது," என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், "உத்தரபிரதேச டி20 லீக்கில் அதிகம் பந்துவீசு முயற்சித்தேன். இன்றைய கிரிக்கெட் உலகில் நீங்கள் ஒரு ஆல்ரவுண்டராக இருக்க வேண்டும். பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக இருக்க வேண்டும். இப்போது நான் பந்துவீச்சிலும் கவனம் செலுத்துகி வருகிறேன். இந்தியன் பிரீமியர் லீக்கில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்பது குறித்து நான் இதுவரை யோசிக்கவில்லை. அணியின் வெற்றிக்காக மட்டும் உழைக்க விரும்புகிறேன். இந்திய அணியில் நான் இடம் பிடிப்பேன் என்று நான் யோசித்தது இல்லை. அதுவே என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. நான் என் வேலையில் கடினமாக உழைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் தலைமையில் கோப்பையை வென்றது. இருப்பினும் ஏலத்தில் அவரை கேகேஆர் அணி தக்க வைக்கவில்லை. டெல்லி கேபிட்டல்ஸ் அணி அவரை ஏலத்தில் அதிக விலைக்கு எடுத்தது. அதே சமயம் கொல்கத்தா அணி வெங்கடேஷ் ஐயரை 23.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியது. மேலும் சிஎஸ்கே வீரர் அஜிங்க்யா ரஹானேவை கடைசி நிமிடத்தில் ஏலத்தில் எடுத்தனர். கேகேஆர் அணி யாரை கேப்டனாக நியமிக்க உள்ளனர் என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

மேலும் படிக்க | இந்திய அணிக்கு காத்திருக்கும் ஆப்பு... இந்த வீரரை வெளியேற்ற வேண்டும் - பிளேயிங் லெவன் வருகிறது மாற்றம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News