RCB அணிக்கு இப்போதே ஆரம்பித்த பிரச்சனை! முக்கிய வீரருக்கு கால் முறிவு

ஐபிஎல் 2023 பிளேயர் ரீட்டென்ஷன் முடிந்திருக்கும் நிலையில், ஆர்சிபி அணியின் முக்கிய வீரர் இந்த ஐபிஎல் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 17, 2022, 07:46 AM IST
  • ஆர்சிபி அணிக்கு ஆரம்பித்த தலைவலி
  • முக்கிய வீரருக்கு காலில் எலும்பு முறிவு
  • அடுத்த ஆண்டு ஐபிஎல் விளையாடுவது சந்தேகம்?
RCB அணிக்கு இப்போதே ஆரம்பித்த பிரச்சனை! முக்கிய வீரருக்கு கால் முறிவு title=

Glenn Maxwell Injury Update: ஐபிஎல் 2023 தொடங்குவதற்கு முன்பே ஆர்சிபி அணிக்கு பெரிய அடி விழுந்துள்ளது. அந்த அணி பிளேயர் ரீட்டென்ஷனில் அறிவித்துள்ள நிலையில், அந்த ரீட்டென்ஷனில் இடம்பெற்றிருக்கும் முக்கிய வீரர் காயமடைந்துள்ளார். அவருக்கு ஏற்பட்டிருக்கும் காயம் காரணமாக ஐபிஎல் 2023 விளையாடுவது சந்தேகம். இது ஆர்சிபி அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

கிளென் மேக்ஸ்வெல் காயம்

20 ஓவர் உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்த மேக்ஸ்வெல், அண்மையில் நண்பர் ஒருவரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். அப்போது நடைபெற்ற பார்ட்டியில் மேக்ஸ்வெலுக்கு கால் முறிவு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், காலில் கட்டுப்போட்டு 12 வாரங்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேக்ஸ்வெல்லுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | நான் என்னடா பண்ணேன்? அருகில் இருந்தவரது மண்டையை உடைத்த ரெய்னா, கோலி!

ஆர்சிபி இயக்குநர் மைக் ஹெசன்

ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணியில் இருக்கும் கிளென் மேக்ஸ்வெல் காயமடைந்திருப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இது குறித்து ஆர்சிபி இயக்குநர் மைக்ஹெசன் பேசும்போது, "மேக்ஸ்வெல் காயமடைந்திருப்பது வருத்தம் தான். அவருடைய காயம் கவலை அளித்தாலும், ஐபிஎல் தொடருக்கு முன்பாக குணமடைந்து களத்துக்கு திரும்புவார் என்ற நம்பிக்கை உள்ளது. மேக்ஸ்வெல் போன்ற ஒரு வீரர் அணியில் இருப்பது அவசியம்" என்று தெரிவித்தார்.  

ஆர்சிபியுடன் மேக்ஸ்வெல்

க்ளென் மேக்ஸ்வெல் ஐபிஎல் 2021 தொடருக்கு முன்பாக RCB அணியுடன் இணைந்தார். 2021 சீசனில் அவர் பேட்டிங்கில் திறம்பட செயல்பட்டார். இதையடுத்து அவரை ரூ.11 கோடிக்கு அந்த அணி தக்க வைத்துக் கொண்டது. கடந்த சீசனில் (ஐபிஎல்-2022) மேக்ஸ்வெல் 13 போட்டிகளில் மொத்தம் 301 ரன்கள் எடுத்தார்.

மேலும் படிக்க | தோனி போட்ட மாஸ்டர் பிளானால் சிஎஸ்கேவில் மீண்டும் ஜடேஜா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News