ஆப்கான் போட்டியில் அஸ்வினுக்கு பதில் இவர்... ஈஸி வெற்றி இந்தியாவுக்குதான்!

IND vs AFG: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான நாளைய (அக். 11) போட்டியில், இந்திய அணி நிர்வாகம் அஸ்வினுக்கு ஓய்வளிக்க வேண்டும் என இந்திய அணியின் மூத்த வீரர் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். அதுகுறித்து முழுமையாக இங்கு காண்போம்.

Written by - Sudharsan G | Last Updated : Oct 10, 2023, 04:39 PM IST
  • அஸ்வின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 1 விக்கெட்டை எடுத்தார்.
  • ஸ்மித்திற்கு எதிராக அஸ்வின் வீசிய ஒரு கேரம் பால் பலரையும் வியக்க வைத்தது.
  • அஸ்வின் 10 ஓவர்கள் வீசி 32 ரன்களை மட்டுமே கொடுத்தார்.
ஆப்கான் போட்டியில் அஸ்வினுக்கு பதில் இவர்... ஈஸி வெற்றி இந்தியாவுக்குதான்! title=

ICC World Cup 2023, IND vs AFG: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய சுழற்பந்துவீச்சாளர்களின் தாக்குதல் ஆஸ்திரேலியாவின் டாப் - மிடில் ஆர்டர் பேட்டர்களை நிலைகுலைய செய்தது. 

ஜடேஜா, குல்தீப், அஸ்வின் (Ravichandran Ashwin) ஆகியோர் தலா 10 ஓவர்கள் வீசினர். இதில். ஜடஜோ 3 விக்கெட்டுகளை வீழ்த்தி 28 ரன்களையும், குல்தீப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி 42 ரன்களையும், அஸ்வின் 1 விக்கெட்டை வீழ்த்தி 32 ரன்களையும் கொடுத்தனர். அதன்மூலம், அவர்கள் மொத்தம் 30 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை எடுத்து, 102 ரன்களை மட்டும் கொடுத்திருந்தனர்.

மேலும் படிக்க | பதக்கம் வென்ற விராட் கோலி... டிரெஸ்ஸிங் ரூம்மில் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரல்!

அந்தளவிற்கு சுழற்பந்துவீச்சு இந்தியாவின் வெற்றிக்கு கைக்கொடுத்தது. ஆனால், அடுத்து இந்தியா நடைபெறும் டெல்லி, அகமதாபாத் மைதானங்கள் இந்தளவிற்கு சுழற்பந்துவீச்சிற்கு சாதகமாக இருக்காது என கூறப்படுகிறது. டெல்லியில் நடந்த தென்னாப்பிரிக்கா - இலங்கை லீக் போட்டியில் ஆடுகளம் பெரிதாக சுழற்பந்துவீச்சுக்கு உதவவில்லை. அதேபோல், இங்கிலாந்து - நியூசிலாந்து போட்டி நடைபெற்ற அகமதாபாத் மைதானமும் சற்று மெதுவான ஆடுகளத்தை கொண்டிருப்பதால் மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் தேவையில்லை என வல்லுநர்கள் கூறுகின்றனர். 

அந்த வகையில் இந்திய அணியின் அதிரடி அதிரடி ஆட்டக்காரர் என அழைக்கப்பட்டவரும், மூத்த வீரருமான சேவாக் (Sehwag) கூறுகையில்,"ரவிச்சந்திரன் அஸ்வின் அடுத்த போட்டியில் ஓய்வெடுப்பார் என நம்புகிறேன். முகமது ஷமி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார், அவர் அற்புதமான ஃபார்மில் இருக்கிறார். அவரை எடுக்கலாம். இந்த ஆடுகளம் (டெல்லி) வித்தியாசமானது, மைதானமும் சிறியது. அஸ்வினின் வயதுப் பிரச்சினையையும் நாம் கணக்கில் எடுக்க வேண்டும். இதன் விளைவாக, இந்தியா அவரை முக்கிய ஆட்டங்களிலேயே விளையாட வைக்க வேண்டும் என நினைக்கிறேன். 

கேஎல் ராகுலை மிடில் ஆர்டரில் பேட் செய்து விக்கெட்டுகள் சரியாமல் காப்பாற்றினார். இதில் ராகுல் டிராவிட் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரும் பாராட்டுக்குரியவர்கள். அந்த இடத்தில் கேஎல் ராகுலின் பேட்டிங்கால் இந்திய அணியின் மிடில் ஆர்டர் வலுப்பெற்றுள்ளது. ராகுல் தொடர்ந்து ரோஹித் உடன் இணைந்து இன்னிங்ஸைத் தொடங்கினால் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா போன்றவர்களை நாம் மிடில் ஆர்டரில் நம்பியிருக்க வேண்டியிருக்கும்" என்று அவர் மேலும் கூறினார்.

ஷர்துல் தாக்கூர் அல்லது ஷமி

பலரும் பேட்டிங் டெப்த் வேண்டும் என்பதற்காக ஷமிக்கு பதில் ஷர்துல் தாக்கூரை அணியில் எடுக்கலாம் என பரிந்துரைகின்றனர். இருப்பினும், ஷமி கொடுக்கும் பந்துவீச்சு வேரியேஷனை ஷர்துல் தாக்கூரால் கொடுக்க முடியாது என்றும் அதற்கு பதில் பும்ரா பேட்டிங்கின்போது எட்டாவது இடத்தில் இறங்கி சில ரன்களை அடித்துக்கொடுப்பார் எனவும் சிலர் பரிந்துரைக்கின்றனர். எனவே, டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நாளை நடைபெறும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் (IND vs AFG) அஸ்வின் அமரவைத்துவிட்டு ஷர்துலை கொண்டு வருவதற்கு பதில் ஷமியை (Ashwin Replacement) கொண்டு வருவதே சாலச் சிறந்தது என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க | இந்திய அணிக்கு ஷாக்... வீடு திரும்பும் சுப்மான் கில் - பாகிஸ்தான் போட்டிக்கும் வாய்ப்பில்லை...?
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News