FIFA திட்டப் பணிகளில் 500 புலம் பெயர்ந்த தொழிலாளிகள் இறந்தனர்: ஒப்புக்கொண்ட கத்தார்

Qatar On Migrant Workers: உலகக் கோப்பை தொடர்பான பணித் திட்டங்களில் 400 முதல் 500 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இறந்திருக்கலாம் என்று கத்தார் அரசு ஒப்புக் கொண்டுள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 1, 2022, 06:08 AM IST
  • உலகக் கோப்பை தொடர்பான வேலைகளில் 400 முதல் 500 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இறந்திருக்கலாம்
  • முதன்முறையாக சர்ச்சைக்கு பதிலளித்த கத்தார்
  • 120 டிகிரி வெப்பத்தில் வேலை செய்த தொழிலாளர்கள்
FIFA திட்டப் பணிகளில் 500 புலம் பெயர்ந்த தொழிலாளிகள் இறந்தனர்: ஒப்புக்கொண்ட கத்தார் title=

நியூடெல்லி: உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஃபீபா உலகக்கோப்பை போட்டி உலகம் முழுவதும் பார்க்கப்பட்டு வரும் நிலையில், தங்கள் நாட்டின் மீதான மிகப் பெரிய குற்றச்சாட்டை கத்தார் ஒப்புக்கொண்டுள்ளது. கத்தார் உலகக் கோப்பை போட்டிகளை பலரும் விமர்சிப்பதும், சர்ச்சைகளை எழுப்புவதும், விளையாட்டுப் போட்டிகள் தொடர்பானது மட்டுமே இல்லை, இந்த எதிர்ப்பு, ஆடுகளத்திற்கு வெளியே மனித உரிமை மீறல்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கத்தார் நடத்திய மற்றும் கையாண்ட முறை ஆகியவற்றிற்கான விமர்சனங்களால் கத்தார் நாடு பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வந்தது. 

இந்த நிலையில், உலகக் கோப்பை தொடர்பான பணித் திட்டங்களில் 400 முதல் 500 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இறந்திருக்கலாம் என்று FIFA உலகக் கோப்பை நிகழ்ச்சிகளின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் கத்தார் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக கத்தார் முதன்முறையாக வாயைத் திறந்துள்ளது.

பிரிட்டிஷ் பத்திரிகையாளர் பியர்ஸ் மோர்கனுடன் ஒரு நேர்காணலில், உலகக் கோப்பைத் தலைவரும், டெலிவரி மற்றும் மரபுக்கான உச்சக் குழுவின் பொதுச் செயலாளருமான ஹசன் அல்-தவாடி புலம் பெயர்ந்த தொழிலாளிகள் தொடர்பான விவகாரம் பற்றி பேசினார். ஆனால், இறப்பு எண்ணிக்கை தொடர்பான துல்லியமான எண்ணிக்கையை அவர் வழங்கவில்லை. 

மேலும் படிக்க | FIFA World Cup : செக்ஸ் குற்றச்சாட்டுகள்... கால்பந்து உலகையே உலுக்கிய 5 சம்பவங்கள்!

“உலகக்கோப்பை போட்டிகளுக்கான கட்டுமானப் பணிகளில், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 400 முதல் 500 பேர் வரை உயிரிழந்திருக்கலாம். என்னிடம் சரியான எண்ணிக்கை இல்லை, அது விவாதிக்கப்பட்ட ஒன்று. மரணம் என்பது மிகவும் அதிகமானது தான்” என்று அல்-தவாதி கூறினார்.

"ஆனால் ஒவ்வொரு ஆண்டும், கட்டுமானத் தளங்களில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தரநிலைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன, குறைந்தபட்சம் உலகக் கோப்பை போட்டிகளுகளுக்கான கட்டுமானத் தளங்கள் பற்றி சொல்லலாம். அதற்கு, நாங்கள் பொறுப்பேற்க வேண்டும் தான். மிக நிச்சயமாக நாங்கள் பாராட்டுதல் பெறும் அளவுக்கு உலகக் கோப்பை தளங்களில் பணிச்சூழலை முன்னேற்றி இருக்கிறோம்” என்று ஹசன் அல்-தவாடி தெரிவித்தார்.

2014 ஆம் ஆண்டில் உள்கட்டமைப்பு கட்டுமானப் பணிகள் தொடங்கியதில் இருந்து தொழிலாளர்களிடையே மூன்று வேலை தொடர்பான இறப்புகள் மற்றும் 37 வேலை அல்லாத இறப்புகள் மட்டுமே இருப்பதாக உச்சக் குழு முன்பு கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | முடிவுக்கு வருகிறதா சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் வாழ்க்கை?

இருப்பினும், கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட கார்டியன் அறிக்கை, இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த 6,500 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் WC உள்கட்டமைப்புப் பணிகளில் உயிரிழந்ததாகக் கூறியது.

ஏறக்குறைய ஒரு தசாப்தத்திற்கு முன்னர் மேற்காசிய நாடான கத்தாரில் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை வழங்க ஃபிஃபா அனுமதி வழங்கியதிலிருந்து சர்ச்சைகள் தொடங்கிவிட்டன. நிபுணர்களின் கூற்றுப்படி, எண்ணெய் வளம் கொண்ட நாடு தன்னை ஸ்போர்ட்ஸ்வாஷ் செய்ய WC ஐப் பயன்படுத்துகிறது. இருப்பினும், அவ்வாறு செய்ய, கிட்டத்தட்ட $220 பில்லியன் செலவழித்து மைதானங்கள் மற்றும் தொடர்புடைய உள்கட்டமைப்புகளை அடித்தளத்தில் இருந்து உருவாக்க முயற்சித்துள்ளது.

நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியை நடத்துவதற்கு, பல கால்பந்து நாடுகள் கண்டனம் தெரிவித்த போதிலும், FIFA எதிர்ப்புகளை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | FIFA Qatar: கால்பந்துப் போட்டியில் கத்தாரின் கடுமையான ஆடைக் கட்டுப்பாடுகளை துறந்த மாடல்!

தி கார்டியன் பத்திரிகை மேற்கொண்ட விசாரணையில், கத்தாரில் உலகக் கோப்பையை நடத்தும் உரிமையை பெற்றதில் இருந்து 6,500 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இறந்துள்ளனர், இது போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தொடர்பான கட்டமைப்புக்காக பணியாற்றியவர்களின் பலி என்று கருதப்படுகிறது. இந்த கட்டுமானங்களுக்காக, சுமார் 220 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவழிக்கப்பட்டது. 

இந்த புலம்பெயர் தொழிலாளர் இறப்புகள் தொழில் அல்லது வேலை செய்யும் இடத்தால் வகைப்படுத்தப்படவில்லை என்றாலும், வளைகுடாவில் தொழிலாளர் உரிமைகளில் நிபுணத்துவம் பெற்ற குழுக்கள் உறுதிபடுத்துகின்றன. "இறந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் கணிசமானவர்கள், ஃபீபா கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் உரிமையை கத்தார் வென்ற பிறகு அதாவது, 2011 முதல் உயிரிழந்தவர்கள்” என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | சானியா மிர்சா விவாகரத்தை அறிவிக்காதது ஏன் தெரியுமா...?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News