Tokyo Olympics: இந்திய தேசியக் கொடியை ஏந்திச்செல்லும் பெருமையை பெறுவாரா பி.வி. சிந்து?

இந்தியாவின் நட்சத்திர பூப்பந்து வீரரும் ரியோ விளையாட்டுகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனையுமான பி.வி.சிந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்பவர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்படக்கூடும் என கூறப்பட்டுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 26, 2021, 07:29 PM IST
  • பி.வி. சிந்து ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் பெருமையைப் பெறக்கூடும்..
  • ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய தேசியக் கொடியை யார் ஏந்திச்செல்ல வெண்டும் என்பது குறித்த எந்த குறிப்பிட்ட விதிகளும் இல்லை.
  • முந்தைய பதிப்பில் பதக்கம் வென்றவர் பெரும்பாலும் அடுத்த பதிப்பிற்கான கொடியை ஏந்திச்செல்வது வழக்கம்.
Tokyo Olympics: இந்திய தேசியக் கொடியை ஏந்திச்செல்லும் பெருமையை பெறுவாரா பி.வி. சிந்து? title=

இந்தியாவின் நட்சத்திர பூப்பந்து வீரரும் ரியோ விளையாட்டுகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனையுமான பி.வி.சிந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்பவர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்படக்கூடும் என கூறப்பட்டுள்ளது. 

இந்த முறை, ஒலிம்பிக் போட்டிகளின் (Olympic Games) தொடக்க விழாவில் இந்திய தேசியக் கொடியை ஒரு ஆண் வீரரும் ஒரு பெண் வீராங்கனையும் ஏந்திச் செல்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும். எனினும், இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்பவர்களில் ஒருவராக பி.வி. சிந்து (PV Sindhu) கண்டிப்பாக இருப்பார் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. "சிந்து கொடி ஏந்திச் செல்பவர்களின் ஒருவராக இருக்கக்கூடும்" என்று இந்திய ஒலிம்பிக் அமைப்பான ஐஓஏ வட்டாரம் பி.டி.ஐ இடம் தெரிவித்தது.

ALSO READ:Olympics மற்றும் Wimbledon இல் இருந்து விலகுவதாக ரஃபேல் நடால் அறிவிப்பு: காரணம் இதுதான் 

ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய தேசியக் கொடியை யார் ஏந்திச்செல்ல வெண்டும் என்பது குறித்த எந்த குறிப்பிட்ட விதிகளும் இல்லை என்றாலும், முந்தைய பதிப்பில் பதக்கம் வென்றவர் பெரும்பாலும் அடுத்த பதிப்பிற்கான கொடியை ஏந்திச்செல்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது. 

இதற்கு முந்திய ஒலிம்பிக்சில் இந்திய வீரர்களில் இருவர் பதக்கம் வென்றனர். அதில் ஒருவரான மல்யுத்த வீரர் சாக்ஷி மாலிக் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெறவில்லை. ஆண் வீர்ரகளில் இந்திய தேசியக் கொடியை யார் ஏந்திச் செலார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

புகழ்பெற்ற தடகள விளையாட்டு வீரர் நீரஜ் சோப்ரா, டிடி வீரர் ஷரத் கமல், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, குத்துச்சண்டை வீரர் அமித் பங்கல் ஆகியோரது பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. எனினும், ரியோ டி ஜெனிரோவில் நடந்த முந்தைய ஒலிம்பிக் போட்டிகளில் (Rio Olympics) எந்த ஆண் விளையாட்டு வீர்ரும் எந்த பதக்கத்தையும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:கொரோனாவால் ஜப்பானில் அவசர நிலை நீட்டிப்பு; ஒலிப்பிக் போட்டிகளின் நிலை என்ன 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News