ஐபிஎல் 2022 இன் 8வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் தோல்வியடைந்தது. ரஸ்ஸல் ஒருபுறம் அதிரடி காட்டினாலும், இலங்கை வீரரான பனுகா ராஜபக்சா அதிரடியில் மலைக்க வைத்தார். இந்தப் போட்டியில் பெறும் கவனம் பெற்ற அவருக்கு 30 வயது தான் ஆகிறது என்றாலும், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அண்மையில் அறிவித்தார். ஆனால், இப்போது அந்த முடிவை திரும்ப பெற்றுள்ளார்.
மேலும் படிக்க | மொயின் அலியால் சிஎஸ்கே-வில் பறிபோன நியூசிலாந்து வீரரின் வாய்ப்பு
கொல்கத்தாவுக்கு எதிராக அதிரடி
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி பெரிய 137 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் பனுகா ராஜபக்ச களத்தில் இருக்கும் வரை பந்துகள் மைதானத்துக்கு வெளியேற பறந்தன. அதிரடியில் மலைக்க வைத்த அவரின் ஆட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. 9 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 31 ரன்கள் விளாசினார். அவரது ஸ்டைக்ரேட் 344.44 ஆக இருந்தது. இதில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களும் அடங்கும்.
முதல் ஐபிஎல் போட்டி
பனுக ராஜபக்சா முதன்முறையாக ஐபிஎல் போட்டியில் விளையாடுகிறார். அவரை அடிப்படை விலையான 50 லட்சத்துக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது. ஆனால், அவரின் ஆட்டம் மற்ற அணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. நேற்றைய போட்டியில் நிலைத்து நின்று விளையாடியிருந்தால், பஞ்சாப் அணியின் ஸ்கோர் நிச்சயம் 200 ரன்களை கடந்திருக்கும். அவர் ஆட்டமிழந்த பிறகே கொல்கத்தா அணியின் பக்கம் ஆட்டம் சென்றது.
30 வயதில் ஓய்வு
இலங்கை அணியின் முன்னணி வீரராக இருந்த பனுகா ராஜபக்ச இந்த ஆண்டின் தொடக்கத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர், ஒரே வாரத்தில் தன்னுடைய முடிவை திரும்ப பெற்றுள்ளார். 2019 இல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு அறிமுகமான பனுகா ராஜபக்ச, இதுவரை 18 போட்டிகளில் விளையாடி 2 அரை சதங்கள் உட்பட 320 ரன்கள் எடுத்துள்ளார். இத்துடன் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 89 ரன்கள் எடுத்துள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் வெற்றி
முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியுடன் மோதிய பஞ்சாப் அணி, இப்போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 206 ரன்களை பெங்களுரு அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தபோதும், பனுகா ராஜபக்சாவின் அதிரடியால் பஞ்சாப் அணி 19வது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டியது. இப்போட்டியில் 22 பந்துகளில் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 43 ரன்கள் எடுத்து அசத்தினார்.
மேலும் படிக்க | ஐபிஎல் போட்டிக்கு இடையில் ஓய்வு பெற போகும் சிஎஸ்கே ஸ்டார் வீரர்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR