போலந்து நாட்டின் வ்ரோக்லாவில் நடந்த உலக வில்வித்தை இளைஞர் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி 8 தங்கம் உட்பட 15 பதக்கங்களை வென்று நாட்டுற்கு பெருமைப்படுத்தியுள்ளது.
சுதந்திர தினத்தன்று நாட்டுக்கு பெருமை தேடித் தந்த இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கும் முன்கூட்டியே வாழ்த்துக்களை தெரிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி.
இந்த வெற்றி இளைஞர்களை மேலும் விளையாட்டுத்துறையில் ஊக்குவித்து மேலும் பலர் வில்வித்தையில் ஈடுபட ஆர்வமூட்டும் என்றும் பிரதமர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
The Indian contingent at the World Archery Youth Championships in Wroclaw has made us proud by winning 15 medals including 8 Golds. Congrats to our team and best wishes for their future endeavours. May this success inspire more youngsters to pursue archery and excel in it. pic.twitter.com/b5E5UdE4zX
— Narendra Modi (@narendramodi) August 15, 2021
இந்த ஆண்டு (2021) உலக வில்வித்தை இளைஞர் சாம்பியன்ஷிப் போலந்து (Poland) நாட்டின் வ்ரோகாவ் (Wroclaw) என்ற இடத்தில் நடைபெற்றது. ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று தொடங்கிய போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்தன.
உலக இளைஞர் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிகளின் 16வது பதிப்பு இந்த ஆண்டு நடைபெற்றது. உலக வில்வித்தை அமைப்பு இந்த போட்டிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த போட்டிகளில் 20 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டிகளும் நடத்தப்பட்டன.
இந்த ஆண்டு இந்திய வீர-வீராங்கனைகள் மிகவும் சிறப்பாக விளையாடி 8 தங்கம் (gold medals) உட்பட மொத்தம் 15 பதக்கங்களை வென்றனர். அதிலும், நாட்டின் 75வது சுதந்திர நாளான்று இந்த சாதனை நிகழ்த்தப்பட்டிருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கிறது.
Komalika Bari is the new under-21 recurve world champion! pic.twitter.com/CRx8reovHK
— World Archery (@worldarchery) August 15, 2021
வ்ரோக்லாவில் சனிக்கிழமை (2021, ஆகஸ்ட் 14) நடைபெற்ற உலக வில்வித்தை இளைஞர் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஆடவர், மகளிர் மற்றும் கலப்பு அணிகள் தங்கப் பதக்கங்களை வென்றன. இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி, 228-216 என்ற கணக்கில் துருக்கியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றனர். இந்திய அணியில் பர்னீத் கவுர், பிரியா குர்ஜார், ரிதி வர்ஷினி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
Also Read | Olympic Gold: நீரஜ் சோப்ராவின் ஒலிம்பிக் வெற்றியை ஜெர்மனி கொண்டாடுவதன் காரணம் தெரியுமா?
குஷால் தலால், சாஹில் சவுத்ரி மற்றும் நிதின் அபார் ஆகியோர் அடங்கிய இந்தியாவின் கேடட் ஆண்கள் அணி, அமெரிக்காவை (USA) வீழ்த்தியது.
ஆகஸ்ட் 10 அன்று, இந்திய வில்வித்தை பெண்கள் மற்றும் கலப்பு அணிகள், உலக வில்வித்தை இளைஞர் சாம்பியன்ஷிப்பின் தகுதி நிலைகளில் இரண்டு ஜூனியர் (U-18) உலக சாதனைகளை முறியடித்தனர்.
பிரியா குர்ஜார், தனிநபர் பிரிவில் 696 புள்ளிகள் எடுத்தார், பர்னீத் கவுர் மற்றும் ரித்து செந்தில்குமார் 2067/2160 புள்ளிகளுடன் இணைந்து, 22 புள்ளிகள் வித்தியாசத்தில் மகளிர் அணியின் உலக சாதனையை முறியடித்தனர்.
Also Read | Salute the Olympic Gold! நீரஜ் சோப்ராவின் நினைவாக நாணயத்தை வெளியிடலாமே?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR