இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக ICC அபராதம் விதித்துள்ளது!
மேற்கிந்திய அணிக்கு எதிரான டி20 போட்டியில், மேற்கிந்திய அணி பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியை ICC விதிமுறையை மீறும் வகையில் வெளிப்படுத்தியதாக சைனிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி புளோரிடாவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் அறிமுகம் ஆன இந்திய வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி நிக்கோலஸ் பூரனை வீழ்த்தினார்.
அப்போது ICC விதிமுறையை மீறும் வகையில் சந்தோசத்தை வெளிப்படுத்தியதாக புகார் கூறப்பட்டது. தன்மீதான தவறை நவ்தீப் ஒப்புக்கொண்டார். இதனால் ICC அவருக்கு தகுதி நீக்கத்திற்கான ஒரு புள்ளியை அளித்துள்ளது.
தனது முதல் போட்டியில் நவ்தீப் சைனி 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அமர்க்களப்படுத்தினார். இதில் ஆட்டத்தின் 20–வது ஓவரை அவர் மெய்டனாக வீசினார். 20 ஓவர் கிரிக்கெட்டில் இறுதி ஓவரை மெய்டனாக வீசிய முதல் இந்தியர் இவர் தான்.
முதல் போட்டியிலேயே ஜொலித்த சைனி, ஒழுங்கு நடவடிக்கையில் மாட்டிக்கொண்டது கிரிக்கெட் ரசிகர்கள் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.