ஐபில் 2021 கடைசி லீக் ஆட்டங்கள் இன்று நடைபெற்றது. 55வது போட்டியில் மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. இன்றைய போட்டியில் 173 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விடலாம் என்ற கணக்கின் அடிப்படையில் மும்பை அணி விளையாடியது. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.
ரோஹித் சர்மா 13 பந்துகளில் 18 ரன்களில் வெளியேறினார். இஷான் கிசன் தனது அதிரடியான ஆட்டத்தில் 32 பந்துகளில் 84 ரன்கள் அடித்து அசத்தினார். முதல் 8 ஓவரிலேயே மும்பை அணி 100 ரன்களை கடந்தது. ஹர்திக் பாண்டியா மற்றும் பொலார்ட் அடுத்தடுத்து அவுட்டாக பின் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினார். 40 பந்துகளில் 82 ரன்கள் அடித்து எதிரணியை கலங்கடித்தார். 13 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் அவுட்டானார் சூரியகுமார். அதன்பின் களமிறங்கிய மும்பை அணி வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.
20 ஓவர் முடிவில் மும்பை அணி 9 விக்கெட் இழப்பிற்கு இழந்து 235 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. மிகக் கடின இலக்கை விரட்டிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடினார். ஜேசன் ராய் 34 ரன்களும், அபிஷேக் ஷர்மா முப்பத்திமூன்று ரன்களும் எடுத்தனர். பின் களமிறங்கிய மணிஷ் பாண்டே 69 ரன்கள் விளாச ஹைதராபாத் அணியும் ஒன்பது ஓவரில் 100 ரன்களை கடந்தது. அதன்பின் களமிறங்கிய ஐதராபாத் பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிக்க தவறியதால் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் அடித்து.
We bow out of #IPL2021 with a win and our heads held high!
We gave it our all but the qualification scenario turned out to be out of our reach. #OneFamily #MumbaiIndians #SRHvMI pic.twitter.com/iJ4C5NbjLp
— Mumbai Indians (@mipaltan) October 8, 2021
இதன் மூலம் இந்தப் போட்டியில் மும்பை அணி 42 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருப்பினும் பிளே ஆப் செல்லும் தகுதியை இழந்தது மும்பை அணி.
ALSO READ கடைசி ஓவர் திரில்! டெல்லியை வீழ்த்தியது பெங்களூர்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR