ஐபிஎல் 2017: மும்பை அணி வெற்றி

Last Updated : Apr 10, 2017, 09:07 AM IST
ஐபிஎல் 2017: மும்பை அணி வெற்றி title=

ஐபிஎல் தொடரின் நேற்று நடந்த 2-வது ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. கொல்கத்தாவிற்கு எதிரான இந்த போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. 

முதலில் களம் இறங்கிய காம்பீர் 4.2 ஓவரில் 44 ரன்களாக இருக்கும்போது 13 பந்தில் 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த உத்தப்பா 4 ரன்னில் வெளியேற, மற்றொரு தொடக்க வீரர் லின் 32 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த மணீஷ் பாண்டே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, யூசுப் பதான் (6), சூர்யகுமார் யாதவ் (17) சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.

பாண்டே இறுதிவரை அவுட்டாகாமல் 47 பந்தில் 81 ரன்கள் எடுக்க, கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் சேர்த்தது. பின்னர் 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி பேட்டிங் செய்தது.

துவக்கம் முதல் சீராக ரன்களை குவித்து வந்த மும்பை அணியின் துவக்க ஆட்டக்காரர்களான படேல் 30 ரன்களையும், பட்லர் 28 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். பின் களமிறங்கிய சுரேஷ் ரெய்னா அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் அரை சதம் கடந்து அவுட்டானார். 

இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஆர்.ஜி ஷர்மா, கே.எசத் பாண்டியா மற்றும் பொல்லார்டு சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் எச்.எச். பாண்டியா 29 ரன்களை குவித்து மும்பை அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இவருடன் ஹர்பஜன் சிங் ஆட்டமிழக்காமல் ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தார். 

இறுதியில் மும்பை அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 180 ரன்களை சேர்த்து கொல்கத்தா அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Trending News