சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் தோனி, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு ராஞ்சியில் உள்ள தனது இல்லத்தில் பொழுதை கழித்து வருகிறார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி பல்வேறு கொண்டாட்டங்களுக்காக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து வருகிறார். ராஞ்சியில் சில இளம் கிரிக்கெட் வீரர்களை சந்திக்க ஜேஎஸ்சிஏ மைதானத்துக்கும் அவ்வப்போது செல்கிறார். ஓய்வு நேரத்தில் தனது மூட்டு வலியை சரிசெய்ய ராஞ்சி கிராமத்தில் உள்ள ஒரு வைத்தியரிடம் மருந்து எடுத்து வருகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. தோனி தனது வீட்டிலிருந்து நான்கு நாட்களுக்கு ஒரு முறை 70 கிலோமீட்டர் பயணம் செய்து வந்து மருந்தை பெற்று செல்கிறார்.
மேலும் படிக்க | இங்கிலாந்தில் வரலாறு படைக்குமா இந்தியா? பும்ராவுக்கு காத்திருக்கும் சவால்
தோனிக்கு முன், இதே வைத்தியர் அவரது பெற்றோருக்கும் சிகிச்சை அளித்துள்ளார். கடந்த 3 தசாப்தங்களாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார், மரத்தடியில் தார்பாய் கூடாரத்தில் அமர்ந்து தோனி கடந்த ஒரு மாதமாக முழங்கால் வலிக்கு மருந்து வாங்கி வருகிறார். அவர் அமர்ந்திருக்கும் இடம் லபுங் காவல் நிலையப் பகுதியில் உள்ள கட்டிங்கேலாவில் உள்ளது. அந்த வைத்தியரின் பெயர் வைத்திய பந்தன் சிங் கர்வார். மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பந்தன் சிங் இவ்வளவு பிரபலமான தோனிக்கு சிகிச்சை அளித்ததை அறிந்திருக்கவில்லை. ஒரு நாள் காரைச் சுற்றி பல இளம் குழந்தைகள் தோனியுடன் செல்ஃபி எடுப்பதைப் பார்க்கும் வரை தோனியைப் பற்றி அவர் அறிந்திருக்கவில்லை. தோனியின் பெற்றோர்கள் தோனியை பார்க்க வரும்போது அவர் அவர்களுக்கு சிகிச்சை அளித்தது கூட அவருக்கு தெரியாது.
#MSDhoni @msdhoni gets treatment for knee in #Ranchi village, doctor sits under a tree . pic.twitter.com/ws5EJxwc6C
— Jayprakash MSDian(@ms_dhoni_077) July 1, 2022
இது குறித்து வைத்தியர் கூறியதாவது, "எந்த ஆடம்பரமும் இல்லாமல் சாதாரண நோயாளி போல் தோனி வருகிறார். நான்கு நாட்களுக்கு ஒருமுறை தோனி வருவார் என்ற செய்தி அவரது ரசிகர்களுக்கு சென்று விட்டது. தற்போது அவர் காரில் அமர்ந்து மருந்து சாப்பிட்டு செல்கிறார். தோனியின் முழங்கால் வலி விரைவில் குணமாகும் என நம்புகிறோன்" என்று கூறினார். தோனி ஐபிஎல் 2023-ல் பங்கேற்க உள்ளார். அநேகமாக அது தோனியின் கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
மேலும் படிக்க | அடித்தது அதிர்ஷ்டம்! இந்திய அணிக்கு கேப்டனான தினேஷ் கார்த்திக்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR