இந்தியன் பிரீமியர் லீக்கில் அடுத்த ஆண்டு தோனி விளையாடுவாரா? மாட்டாரா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. 2019ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி ஐபிஎல்லில் மட்டுமே விளையாடி வருகிறார். ஐபிஎல்லில் ஒவ்வொரு ஆண்டும் தோனியிடம் அடுத்த ஆண்டு விளையாடுவீர்களா என்று கேள்வி எழுப்பப்படும். 2023ம் ஆண்டு 5வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றவுடன் தனது ஓய்வை அறிவிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்தனர். இருப்பினும் தோனி தனது ரசிகர்களுக்காக இன்னும் ஒரு வருடம் விளையாடுவேன் என்று தெரிவித்து இருந்தார். 2024 ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு, தனது கேப்டன்சியை ருதுராஜ் கெய்க்வாடுக்கு வழங்கினார்.
மேலும் படிக்க | டெல்லியில் இருந்து விலகி இந்த அணிக்கு பயிற்சியாளராகும் ரிக்கி பாண்டிங்?
இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அடுத்த கட்டத்திற்கான மாற்றத்திற்கு தோனி தயாராகி விட்டார் என்று கூறப்பட்டது. 2024 ஐபிஎல் முழுவதும் தோனி ஒரு வீரராக மட்டுமே விளையாடினார். இருப்பினும் சிஎஸ்கே அணி பிளே ஆப்களுக்கு தகுதி பெற தவறியது. அடுத்த ஆண்டு மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் தோனி என்ன செய்ய போகிறார் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் அணி உரிமையாளர்களுக்கும், பிசிசிஐக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பில் மெகா ஏலம் தொடர்பான விதிகள் பேசப்பட்டது. அதில் சென்னை அணி அன்கேப்ட் பிளேயர் விதியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுள்ளது.
இந்த விதியின் மூலம் சர்வதேச போட்டியில் ஓய்வை அறிவித்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக உள்ள வீரர்களை அன்கேப்ட் பிளேயர் என்ற முறையில் குறைந்த விலையில் தக்கவைத்து கொள்ள முடியும். 2021 வரை இந்த அன்கேப்டு விதி அமலில் இருந்தது. பிறகு புதிதாக இரண்டு அணிகள் வந்த பிறகு, இந்த விதி ரத்து செய்யப்பட்டது. ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் இந்த விதி மீண்டும் கொண்டு வரப்பட்டால் தோனி விளையாட அதிக வாய்ப்புள்ளது. இதன் மூலம் கூடுதல் இந்திய வீரரை தக்கவைத்துக்கொள்ளும் வாய்ப்பும் சிஎஸ்கேவிற்கு கிடைக்கும். இந்நிலையில், இந்தியாவின் நட்சத்திர ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின், இந்த விதியை பற்றி அவரது யூடியூப் சேனலில் பேசி உள்ளார்.
“ஐபிஎல் 2025ல் தோனி ஒரு அன்கேப்ட் வீரராக விளையாடுவாரா? அது ஒரு பெரிய கேள்வி தான். ஆனால் விதிகளின்படி அவர் விளையாட முடியும். தோனி பல ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவில்லை. 2019ம் ஆண்டு ஓய்வு பெற்றுவிட்டார். எனவே, அவர் அன்கேப்ட் பிளேயர் தான். ஆனால் தோனி போன்ற ஒரு வீரர் அன் கேப்ட் வீரராக விளையாட முடியுமா?" என்று பேசியுள்ளார். மேலும் பேசிய அஸ்வின், ஒரு அணிக்கு 7-8 வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம் என்ற விதியை கொடுத்தால், ராஜஸ்தான் போன்ற அணி ஜெய்ஸ்வால், ரியான் பராக், சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா, ட்ரென்ட் போல்ட், ஷிம்ரோன் ஹெட்மியர் போன்றவர்களை தக்கவைக்கும். பிறகு அவர்கள் ஏலத்தில் ஒருசில வீரர்களை மட்டும் எடுத்தாலே போதும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | சஞ்சு சாம்சனை வாய்ப்பு கொடுக்காம ஓரங்கட்டுறீங்களேப்பா..! ODIல் ரெக்கார்டு பாருங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ