"ஐ டோன்ட் லைக் 'DUCK’, பட் 'DUCK' லைக்ஸ் மீ"- வைரலாகும் விராட் கோலி மீம்ஸ்!

ஐதராபாத்துக்கு எதிரான இன்றைய போட்டியில் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார் விராட் கோலி.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 8, 2022, 06:52 PM IST
  • நடப்பு ஐ.பி.எல்லில் விராட் கோலி சொதப்பி வருகிறார்.
  • ஐதராபாத்துக்கு எதிரான இன்றைய போட்டியில் முதல் பந்திலேயே அவுட் ஆனார் விராட் கோலி.
  • நடப்புத் தொடரில் இதுவரை 3 முறை கோல்டன் டக் அவுட் ஆகியுள்ளார்.
"ஐ டோன்ட் லைக் 'DUCK’, பட் 'DUCK' லைக்ஸ் மீ"- வைரலாகும் விராட் கோலி மீம்ஸ்! title=

நடப்பு ஐ.பி.எல்லில் ஆர்.சி.பி வீரர் விராட் கோலி கடுமையாகச் சொதப்பி வருகிறார்.

கடந்த சீசனுடன் அவ்வணியின் கேப்டன் பொறுப்பைத் துறந்த அவர், இம்முறை பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடிவருகிறார். இந்நிலையில் ஐதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதல் பந்திலேயே அவுட் ஆனார் விராட் கோலி.  அந்த வகையில் நடப்புத் தொடரில் 12 போட்டிகள் விளையாடியுள்ள விராட் கோலி வெறும் 216 ரன்கள் மட்டுமே இதுவரை பெற்றுள்ளார்.

                             

இத்தொடரில் ஐதராபாத்துக்கு எதிரான முந்தைய போட்டியில் கோல்டன் டக் அவுட் ஆன அவர் இம்முறையும் கோல்டன் டக் அவுட் ஆகியுள்ளார். விராட் கோலி 2008 முதல் 2021ஆம் ஆண்டு வரை ஒட்டுமொத்தமாகவே 3 முறை மட்டுமே கோல்டன் டக் அவுட் ஆகி இருந்தார். ஆனால் நடப்புத் தொடரில் மட்டுமே இதுவரை 3 முறை கோல்டன் டக் அவுட் ஆகியுள்ளார். இதனால் பல்வேறு விமர்சனங்களுக்கு விராட் கோலி ஆளாகியுள்ளார்.

மேலும் படிக்க | Play-Offs: வெளியேறிவிட்டதா சென்னை அணி?! - லேட்டஸ்ட் தகவல் இதோ!

 

இன்றைய போட்டியில் கோல்டன் டக் ஆனதையடுத்து இது தொடர்பாக நிறைய மீம்களும் இணையத்தில் வைரல் ஆகிவருகின்றன.

 

விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா நடித்த ஜீரோ படத்தின் போஸ்டரை இணைத்தும் மீம்கள் உலாவருகின்றன.

கே.ஜி.எஃப்- 2 படத்தில் யஷ் பேசியிருந்த பாப்புலர் வசனத்தைக் கொண்டும் விராட் கோலியின் டக் அவுட்டை விமர்சித்து சிலர் பதிவு வெளியிட்டுவருகின்றனர்.

 

இவை ஒருபுறம் இருந்தாலும் விராட் கோலிக்கு ஆதரவாகவும் பலர் பதிவிட்டு வருகின்றனர்.  ஃபார்ம் அவுட்டில் உள்ள விராட் கோலி விரைவில் ஃபார்முக்குத் திரும்பி சிறப்பாக விளையாடுவார் என அவர்கள் கூறிவருகின்றனர். விராட் கோலியைப் பொறுத்தவரை நடப்பு ஐபிஎல் சற்று சொதப்பலாக இருந்துவந்தாலும் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஐபிஎல் தொடரில் பல சாதனைகளை அவர் நிகழ்த்தியுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்துள்ள வீரரும் விராட் கோலிதான்!

மேலும் படிக்க | இன்று நடக்கவிருந்த CSK vs DC போட்டி ஒத்திவைப்பு? ‘ஷாக்’ தகவல் இதோ!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News